Main Menu

BSNL அகில இந்திய அளவில் வழங்கப்படும் சிறப்பான விதத்தில் பராமரிக்கப் படும் தொலைபேசி நிலயங்களுக்கென வழங்கப்படும் மூன்று பரிசுகள்.

WP_20160824_15_33_28_Pro

WP_20160824_15_34_45_Pro
BSNL தமிழ்நாடு தொலைத்தொடர்பு மாநிலம் , அகில இந்திய அளவில் வழங்கப்படும் சிறப்பான விதத்தில் பராமரிக்கப் படும் தொலைபேசி நிலயங்களுக்கென வழங்கப்படும் பெருமை மிக்க முதல் மூன்று பரிசுகளையும் 2015 ஆண்டுக்காக கீழ்கண்ட தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கென பெற்றிருக்கிறது .

பிரிவு I = கோயம்பத்தூர் தொலைத்தொடர்பு மாவட்டம்
பிரிவு II = சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்
பிரிவு III = திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டம்

BSNL தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் 2015-16 நிதியாண்டில் ரூ. 82.31 கோடி செயல்பாட்டு லாபம் ஈட்டியுள்ளது . 2014-15 நிதியாண்டில் ரூ. 51.39 கோடி செயல்பாட்டு லாபமாக இருந்தது.

2015-16 நிதியாண்டில், BSNL தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் அகில இந்திய அளவில் மொபைல் வருவாயில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
MNP எனப்படும் மொபைல் எண்ணை மாற்றாமல் BSNL சேவைக்கு மாறும் திட்டத்தால் இதுவரை வந்துள்ள நிகர வாடிக்கையாளர்கள் 1,73,193 ஆவர்.

லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் , புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள்
I. அளவற்ற ஞாயிறு இலவச அழைப்புகள்
லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து இரவு 9.00 p.m முதல் 7.00 a.m இலவச அழைப்புச் சலுகையை BSNL ஏற்கனவே அறிமுகப் படுத்தியுள்ளது. கூடுதலாக , இனி ஞாயிறு தோறும் BSNL தரைவழி தொலை பேசியில் இருந்து செய்யும் எல்லா கால்களும் இலவசமாக்க பட்டுள்ளது. 15-8-2016 முதல் அறிவிக்கப்பட்டுள்ள இச்சலுகை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடெங்கும் , அனைத்து நெட்ஒர்க்களுக்கும் , மொபைல் மற்றும் லேண்ட் லைன் கால்கள் எல்லாமே இலவசம்.
இசலுகையின் மூலம் லேண்ட்லைன் வாடிக்கையாளர் சனிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து திங்கள் காலை 7 மணி வரை உங்கள் அன்புக்குரியவரிடம் 34 மணி நேரம் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கலாம் .

இச்சலுகை அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது .

II புதிய “அனுபவம் லேண்ட்லைன் 49” – – இதுவரை வந்திராத மாபெரும் சிறப்பு திட்டம்
15-8-2016 இந்தியாவின் 70 வது சுதந்திர தினத்தை ஒட்டி , BSNL அறிவித்துள்ள புதிய லேண்ட் லைன் திட்டம். ËXPERIENCE -49 ஆகும்.

 இத்திட்டத்தில் மாத வாடகை ரூ .49 மட்டும். இணைப்பு நிறுவன கட்டணம் இல்லை. BSNL ஒரு ரூபாயில் மற்றும் ஏனைய எண்கள் ரூ. 1.20 என்ற கட்டண விகிதத்தில் பேசலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு இத்திட்டம் “பொது” திட்டத்தில் மாற்றப்படும்
 ஒரு BSNL ப்ரீபெய்டு சிம் கார்டும் இலவசமாக அளிக்கப் படுகிறது.

 50,000 புதிய இணைப்புகளை இத்திட்டத்தின் மூலம் வரும் மூன்று மாதங்களில் பெற தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் இலக்கு நிர்ணயத்துள்ளது .

இத்திட்டம் 15-8-2016 முதல் 12-11-2016 வரை சிறப்பு திட்டமாக அறிவிக்கப் பட்டுள்ளது
III அதிகரிக்கப்பட்ட பிராட்பேண்ட் வேகம்

1-8-2016 பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அளவற்ற பிராட்பேண்ட் பிளானில் உள்ள உச்சவேக இலவச பயன்பாடு ( FUP) முடிந்த பின் வேகம் 512 Kbps என குறைவது வழக்கம். இது 1-8-2016 முதல் 1 Mbps ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. .அதாவது தற்போது உள்ள வேகத்தைப் போல இரு மடங்காக பல்வேறு பிராட்பேண்ட் பிளான்களில் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் வேறு எந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனரும் தராத விதமாக BSNL மட்டுமே குறைந்த பட்ச வேகமாக 1Mbps அளிப்பது கவனத்துக்குரியது. . BSNL பிராட் பேண்ட் சேவை அதிவேக இலவச பயன்பாட்டோடு இன்னும் பல சிறப்பு அம்சங்களுடன் வருவது வாடிக்கையாளருக்கு இனி ஒரு புதிய அனுபவமாக இருக்கும் .இந்த புதிய சலுகை பற்றி மேலும் விவரங்கள் BSNL இணைய தளம் www.bsnl.co.in என்ற இணைய தளத்தில் அறியலாம் .

IV சிறப்பு ADSL பிராட்பேண்ட் பிளான்கள்
BSNL தமிழ்நாடு தொலைத்தொடர்பு மாநிலம் சில கவர்ச்சிகரமான புதிய பிராட்பேண்ட் திட்டங்களை தமிழக வாடிக்கையாளர்களுக்கென குறிப்பாக அறிமுகப் படுத்தியுள்ளது. . மாத வாடகை ரூ. 750 கொண்ட திட்டத்தில் 2Mbps வேகம் 5 ஜிபி வரை பயன்பாடு அதன் பின் 1Mbps என பயன்படுத்திக் கொள்ளலாம் மாத வாடகை ரூ. 1045 கொண்ட மற்றொரு திட்டத்தில் 4 Mbps வேகம் 16 ஜிபி வரை பயன்பாடு அதன் பின் 1Mbps பயன்படுத்திக் கொள்ளலாம் .இப்படி இன்னும் பல பிரத்தியேக சிறப்பு திட்டங்களை தமிழ் நாடு வட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

V புதிய தலை முறைக்கான சேவை – NGN (NEXT GENERATION NETWORK)
“அடுத்த தலைமுறை நெட்வொர்க் “ எனப்படும் NGN சேவை தமிழ்நாடு தொலைத்தொடர்பு மாநிலம் முழுவதும் 26 இடங்களில் , ஒரு லட்சம் இணைப்புத் திறனுடன் முதற் கட்டமாக மதுரை , சேலம், திருச்சி , மற்றும் திருப்பூர் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . 96 இடங்களில் இரண்டரை லட்சம் இணைப்புத் திறனுடன் இரண்டாம் கட்டப் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது .

இந்த NGN சேவை வழியாக , பல்வேறு மதிப்பு கூட்டப் பெற்ற சேவைகள் வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது .

1. ஐ. பி. சென்ட்ரெக்ஸ் வசதி
2. தொலை பேசி ப்ரீபெய்டு சேவை
3. மொபைல் மற்றும் பிக்சட் குவியம் இன்னும் பல …..

VI வை-ஃபை ஹாட் ஸ்பாட்

மக்களின் இணைய பயன்பாட்டுக்கென முக்கிய பொது இடங்கள் சுற்றுலா இடங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களில் , பி.எஸ்.என்.எல் நிறுவனம் வை-ஃபை ஹாட் ஸ்பாட்’’ அமைத்து வருகிறது . முதற் கட்டமாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் 62 சுற்றுலா மற்றும் பொது இடங்களில் இவை அமைக்கட்டுள்ளன.

மேலும் தொடர்ந்து தமிழ்நாடு வட்டத்தில் 200 இடங்களில் இந்த வை-ஃபை ஹாட் ஸ்பாட் அமைக்க திட்டமிடப் பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன .

இவற்றில் பிரதம மந்திரியின் “டிஜிட்டல் இந்தியா “திட்டத்தின் ஒரு பகுதியாக , பொது துறை வங்கிகளான இந்தியன் வங்கி, (15 இடங்கள் )பாரத ஸ்டேட் வங்கி (60 இடங்கள்) தேர்ந்தெடுத்துள்ள இடங்களும் அடங்கும் .

VII புன்னகை சேர்ந்த இன்முக சேவை : SERVICE WITH A SMILE
முகமலர்ச்சியுடன் வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், அவர்தம் குறைகளை முழுமையாய் அறிவதும் , அவற்றை நிவர்த்தி செய்வதும் , வாடிக்கையாளர் விரும்பும் சேவையை அவர் விரும்பும் விதத்தில் அளிப்பதும் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளரை தமிழ் நாடு வட்டத்தில் அவரவர் இருப்பிடங்களில் சந்தித்து வாழ்த்தும் “நலந்தானா” திட்டம் 1-7-2016 முதல் நடைபெற்று வந்துள்ளது., தொலைபேசி நிலையத்தில் அருகில் உள்ள உள்வட்ட பகுதி வாடிக்கையாளரை அலுவலர்களும், ஊழியர்களும் சந்திக்கும் சிறப்பு பணி வாடிக்கையாளரை பெரிதும் கவர்ந்துள்ளது .
புதிய வாடிக்கையாளரை உருவாக்குவதும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரை தக்க வைப்புதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும் ..

கடந்த ஐம்பது நாட்களில் , கிட்டதட்ட 50000 வாடிக்கையாளர்களை எங்கள் BSNL குழு தமிழகத்தில் சந்தித்துளளது இதன் மூலம் 1200 பழுதுகள் உடனுக்குடன் நீக்கப் பட்ட்துடன் .3000 புதிய லேண்ட்லைன் இனைப்புகளும் , 2700 பிராட் பேண்ட் இணைப்புகளும் பெற்றுள்ளோம் . தவிர 750 வாடிக்கையாளர்கள மறுஇணைப்பு பெற சம்ம்தம் தெரிவித்து இணைந்திருக்கின்றனர்.15000 சிம் கார்டுகளும் , 35000 “ நலந்தானா” சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களும் இதில் விற்கப்பட்டன.

கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஏற்பாடு செயப்பட்ட மெகா விற்பனை மேளாக்கள் பெரும் வரவேற்பை பெற்றன . ஜூலை மாதத்தில் 38000 சிம்கார்டுகளும் ,ஆகஸ்ட் மாதத்தில் 68000 சிம் கார்டுகளும் இந்த மேளாக்களின் விற்பனையில் அடங்கும் .

மொபைல் சேவை
VIII பேஸ் 7 – விரிவாக்க திட்டங்கள்
 தமிழ்நாடு தொலைத்தொடர்பு மாநிலத்தில் தற்சமயம் 5,828 2G டவர்களும் , 1530 ,3G டவர்களும் செயல்பட்டு வருகின்றன . கூடுதலாக 1421, 3G டவர்கள் அமைக்கப்பட உள்ளன .மேலும் 600 டவர்களில் புதிய தொழிற்நுட்ப கருவிகள் இத்திட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன .
 உட்புற 3 ஜி கவரேஜ் சிறப்பாக செயல்படும் விதத்தில் , பெரு நகர்கள், மாவட்ட தலை நகர்களில் 21 Mbps வேகமும் , தாலுகா தலை நகர்களில் 14.4 Mbps வேகமும் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

மொபைல் வாடிக்கையாளருக்கான சலுகைகள்
IX டேட்டா STV கள்
25.8.2016 அன்று கோகுலாஷ்டமி முதல் கீழ் கண்ட புதிய டேட்டா STV கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன
 டேட்டா STV 1099 – அளவற்ற டேட்டா பயன்பாடு. , வேகத் தடை எதுவுமின்றி . – 30 நாட்கள் வேலிடிடியுடன்
 டேட்டா STV 549 – 10 ஜிபி டேட்டா பயன்பாடு.. – 30 நாட்கள் வேலிடிடியுடன்
 டேட்டா STV 156 – 2 ஜிபி டேட்டா பயன்பாடு.. – 10 நாட்கள் வேலிடிடியுடன்

X சிறப்பு மாணவர் திட்டம் – SPECIAL STUDENT PLAN

20-6-2016 முதல், மாணவர்களை ஈர்க்க BSNL அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டம் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது .குறுகிய கால சலுகை திட்டமான இதில் 1GB டேட்டா உள்ளிட்ட கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன
 பேக்கேஜ் விலை ரூ. 118 மட்டுமே .!
 முதல் 60 நாட்களுக்கு BSNL நெட்ஒர்க்களுக்கு 10 பைசாவிலும் ,ஏனைய நெட் ஒர்க்களுக்கு 30 பைசாவிலும் பேசலாம்
 60 நாட்களுக்கு பின் STV 88 ஐ பயன்படுத்தி அவ்வாறே BSNL நெட்ஒர்க்களுக்கு 10 பைசாவிலும் ,ஏனைய நெட் ஒர்க்களுக்கு 30 பைசாவிலும் பேசலாம்
 நண்பர்கள் இருவரின் எண்களை இணைத்து , BSNL நெட்ஒர்க்களுக்கு 10 பைசாவிலும் ,ஏனைய நெட் ஒர்க்களுக்கு 20 பைசாவிலும் சலுகை கட்டணத்தில் பேசலாம்

டேட்டா பகிர்வு : DATA SHARING

“டேட்டா பகிர்வு” எனப்படும் புதிய சிறப்பு திட்டத்தில் , தமிழ் நாட்டுக்குள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் டேட்டா பகிர்ந்துக் கொள்ளலாம் .

பி.எஸ்.என்.எல் போர்ட்டல் WWW.bsnlszprepaid.com என்னும் எங்கள் இணய தளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை பாஸ்வேர்டு ) பெற்று இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்

ரூ 173 முதல் ரூ 2013 வரை டேட்டா STV களை பயன்படுத்தி 1.2 GB முதல் 21GB வரை இந்த டேட்டா பகிர்வினை செய்ய இயலும் .