பலரது நிதிஉதவியுடன் கோவையில் தயாரான இந்தியாவின் முதலாவது மின்சார பைக் மீண்டும் ஓடத் தயார் ஸ்பேரோ என்ற அந்த பைக் மாசு அல்லாத வியர்வையை ஏற்படுத்ததாத மின்சார பைக் ஆகும்.

DSC02446-e1469843628913-768x1024
Z-Urban setting - outdoor
Z-E-Bike -100 - Supriya
Bike Parts
பலரது நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டு அமோக வரவேற்பை பெற்ற, “ஸ்பேரோ’’ மின்சார பைக்குக்கு பொதுமக்கள் மத்தியில் அமோகவரவேற்பு காணப்பட்டதையடுத்து மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. தனிபட்ட பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஸ்பேரோ பைக் மீண்டும் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. கோவையை சேர்ந்த சனல் பொருட்கள் தயாரிப்பு சாதனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்ட எஸ்.மணிகண்டன் இந்த பைக்கை சிலமாதங்களுக்கு முன்பு ஃபியுல் ஏ டிரீம் டாட் காம் (Fueladream.com)) என்ற வலைதளம் மூலமாக கிரவுட் ஃபண்டிங்க் பிளாட்பார்ம் என்ற புதிய திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட நிதியுதவியுடன் தயாரித்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த பைக் தயாரிப்பதற்கான முதல்கட்டநிதி திரட்டும்பிரச்சாரத்திலேயே இலக்கை மிஞ்சி 25சதவீத தொகை வசூலானது. நாடு முழுவதும் 100க்கும்மேற்பட்ட ஆர்டர்களுடன் ரூ.38லட்சம் ரூபாய் இதற்காக திரண்டது.

38வயதாகும் எம்பிஏ மாணவரான மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த
திட்டத்திற்காக உழைத்துவந்தார். பெங்களூரைவைச் சேர்ந்த கிரவுட் ஃபண்டிங்க் பிளாட்பார்ம் மூலமாக புதிய சிந்தனைகள் மாறுபட்ட கண்டுபிடிப்புகளுடன் தனது இரண்டாவது ஃபியூல் ஏ டிரீம் திட்டத்திற்கான பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளித்தவர்கள் ஸ்பேரோ இ பைக்வை ஃபியூல் ஏ டிரீம் டாட் காம் மூலமாக வாங்கவும் ஆர்டர் கொடுத்தனர்.

நீங்கள் இதற்கான வெற்றிகரமான கதையை இங்கு படிக்கலாம்: – https://www.fueladream.com/home/campaign/125
இது குறித்து ஃப்யூல் ஏ டிரீம் டாட் காம் தலைமை அதிகாரி திரு ராம் பிரசாத், கூறுகையில் துவக்கத்தில் முடியவே முடியாது என்ற நினைக்கும் திட்டத்தை முடிப்பதற்காக மில்டெக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேருவது குறித்து எங்களுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதிக விலை உள்ள ஒரு பொருளை கிரவுட் ஃப்ண்டிங் திட்டத்தின் கீழ் இந்தியாவில் எங்களது சொந்த முயற்சியின் கீழ் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். இந்த அற்புதமான தயாரிப்புக்கு மக்களிடையே கிடைத்த அமோக வரவேற்பு எங்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. முதல்கட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2வது சுற்று உற்பத்தியை துவங்க திட்டமிட்டோம். இதற்காக பலரிடமிருந்து கிடைத்த நிதியுதவியும் சிறப்பாக இருந்தது என்றார்.

மைல் டெக்ஸ் இன்ஜீனியர்ஸ் மேலாண் இயக்குநர் திரு.மணிகண்டன், கூறுகையில், எங்களது முதல்கட்ட பிரச்சாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்தது. பலர் ரூ.100 கூட இதற்காக நிதியுதவி செய்ய முன்வந்தனர்.ஏனென்றால் இந்த புதிய சிந்தனையை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வயதான ஒரு விவசாயி என்னை அழைத்து தனது மகன் அந்த பைக்கை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக கூறினார். ஆலையில் எனக்கு பல ஆண்டுகளாக இயந்திரங்களை கையளும் போதும் கச்சாப்பொருட்களை தேடுவதில் கிடைத்த அனுபவங்களும் பலவற்றை கற்றுக்கொள்ள உதவியது. இதனால் மின்சார பைக் என்ற சிறந்த சாதனத்தை உருவாக்கமுடிந்தது. கிரவுட் ஃப்ண்டிங் முறையில் மேலும் தரமான மின்சார பைக்குகளை உருவாக்கமுடியும்.உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. பேட்டரி மட்டும் சாம்சுங் நிறுவனத்திடமிருந்துவாங்கப்பட்டது. மோட்டார் மற்றும் டயர்ஆகியவை கொரியாவில் உள்ள கூட்டாளிகளிடமிருந்து பெறப்பட்டது என்றார்.

Skip to toolbar