சைதாப்பேட்டை, செனாய் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கிழக்கு ரோட்டரி கிளப் உதவித்தொகைய வழங்கினார்கள். – ARJUNA TV

சைதாப்பேட்டை, செனாய் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கிழக்கு ரோட்டரி கிளப் உதவித்தொகைய வழங்கினார்கள்.

mayer
முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் மற்றும் ஆணையாளர் முனைவர். தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையின் கீழ் கடந்த கல்வியாண்டில் (2015-16) முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2 அம்மா உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்பட்டது. சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கும், செனாய் நகர், சுப்பராயன் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும் என இரண்டு அம்மா உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு உண்டு உறைவிடப்பள்ளிகளிலும் தலா 60 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

கிழக்கு ரோட்டரி கிளப் அப்பள்ளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.40 இலட்சம் நன்கொடையாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக இன்று (19.07.2016) பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களிடம் ரூ.10 இலட்சத்தை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., துணை ஆணையர் (கல்வி) திருமதி ஆஷியா மரியம், இ.ஆ.ப., நிலைக்குழுத்தலைவர் (கல்வி) திரு.த. மகிழன்பன், கல்வி அலுவலர் திருமதி.டி.ரஞ்சனி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 thought on “சைதாப்பேட்டை, செனாய் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கிழக்கு ரோட்டரி கிளப் உதவித்தொகைய வழங்கினார்கள்.

Comments are closed.

tttttttt