சென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவி

சென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரணம்

கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வருமானமின்றி அவதி கவலைப்பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடன் ஜாதி மத,  பேதம் இல்லாமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களைசென்னை ரேஸ் கோர்ஸ் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜித் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும்  முகேஷ் சுரானா ஸ்ரீநாத் சதீஷ் ஹரி கிருஷ்ணன் செல்வா ஆனந்தன் கார்த்திக்

ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இதற்கு காவல்துறை அதிகாரிகள் கிண்டி சட்டம் ஒழுங்கு ஆய்வாலர் சந்துரு அவர்களின் தலைமையில் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தேவை அறிந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது,

AD

Skip to toolbar