கொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது,

கொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் மற்றும் உணவு

பொருட்கள் விநியோகம்…
தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. சென்னை வேளச்சேரி டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான மளிகை, அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில், ஊரடங்கு துவங்கிய நாள்
முதல், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, காலையில் தொடர்ந்து காலை உணவு வழங்கி வருகின்றனர். அதைத் தொடர்ந்து மிகவும் ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கு, அரிசி, மளிகை
பொருட்கள் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு, கபசுர குடிநீர்,
கிருமி நாசினி முக கவசம் டான்சி நகர் நல வாழ்வு சங்கம் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் பிரபு தாஸ் உடன் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்.

AD

Skip to toolbar