இந்தியாவின் தொழிற்திறன் இடைவெளியை இணைப்பதற்கு செயின்ட் கோபைன்-ன் டுறுநு திட்ட நடவடிக்கைகள்

தட்டை கண்ணாடி புராடக்ட்கள் மற்றும் தீர்வுகளில் உலகளவில் முதன்மை வகிக்கும் செயின்ட் கோபைன் – Nவுவுகு-ன் முத்திரைபதித்த தொழிற்திறன் மற்றும் திறமை வளர்ப்பு டுறுநு முனைப்பு திட்டத்தின் முதல் பட்டமளிப்பு விழா சென்னை மியு+சிக் அகாடமி (சங்கீத வித்வத் சபை)-ல் இன்று நடைபெற்றது. இவ்விழா தலைமைவிருந்தினர் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர், பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார் மற்றும் அவரோடு சேர்ந்து செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தெற்காசியா, மலேசியா ரூ எகிப்து – ஃப்ளாட் கிளாஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. டீ. சந்தானம் அவர்களோடு சேர்ந்து டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிப்ளமா வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு முடிவிற்குள் தொழிலுக்கு ஆயத்தமான திறமையுள்ள 400 நபர்கள் உற்பத்தி தொழில்நுட்பத்தில் டிப்ளமா பெற்றவர்களை செயின்ட் கோபைன் உருவாக்கும்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வாய்ப்பு வசதியற்ற பின்னணிகொண்ட மாணவர்கள் மொத்தம் 54 பேர் உற்பத்தி தொழில்நுட்பத்தில் டிப்ளமா பட்டம் பெற்றனர். இந்த விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய முதல் 6 இடங்களை வகித்தவர்கள் பதக்கங்கள் வழங்கப் பெற்றார்கள்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வாய்ப்பு வசதியற்ற வளரினம் பருவத்தினருக்கு தொழிற்திறன்கள் மற்றும் முறைசார் கல்வியை பயிற்சியளித்து கற்பிப்பதற்கு ஒரு செயல்முறை வழியை கண்டறிந்து, அதன் மூலம் தொழில்நுட்ப கல்வி தரத்தை மேம்படுத்தி மிகவும் உற்பத்திக்கு மிகவும் வேலையில் சேர்க்கத்தக்க, தகுதிவாய்ந்த திறமைமிகு தொழிலாளர்களை உருவாக்குவதற்காக செயின்ட் கோபைனும் மற்றும் Nவுவுகு-ம் கூட்டாக ஒன்று சேர்ந்து (ஒரு இந்தோ-சுவிஸ் ஒத்துழைப்பு) டுறுநு திட்டத்தை உருவாக்கினர்.

இந்த திட்டமம் ஆதிகாரபு+ர்வமாக 2012-ல் தொடங்கப்பட்டது. 4 ஆண்டுகள் கொண்ட இந்த டிப்ளமா பட்டப்படிப்பில் 1164 மணிநேரம் பாடமுறை கல்வி மற்றும் 8320 மணிநேரம் செயல்முறை பயிற்சி கல்வி இணைந்த ஒரு பாடதிட்டம் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் முதல் ஆண்டில், ஓராண்டுக்கு ரூ. 66,000 என்பதில் தொடங்கி படிப்படியாக நான்காம் ஆண்டில் ஓராண்டிற்கு ரூ. 120,000 என்பதை அடையும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

53 மாணவர்கள் செயின்ட் கோபைன் பணியாளர்களாக ஆகியுள்ளனர் என்பதும், ஒருவர் தொழில்முனைவராக ஆகியுள்ளார் என்பதும் இந்த திட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரச் சான்று ஆகும். 2020ம் ஆண்டு முடிவில் டுறுநு திட்டத்தின் மூலம் அனைத்து புத்தம்புதிய டிப்ளமா எஞ்ஜினியர் வேலைக்கு ஆளெப்பும் நடைபெற வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்த முனைப்பு திட்டம் குறித்து ஐஐடி மெட்ராஸ், இயக்குநர், பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி அவர்கள் கூறுகையில், ‘தொழிற்திறன் மேம்பாடு வளர்ப்பு ரூ கல்வி என்பது நம்முடைய பொருளாதாரத்திற்கு, குறிப்பாக உற்பத்திக்கு முக்கியமானதாகும் மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஓர் அத்தியவசியமான அங்கமாகும். ஒரு தகுதிவாய்ந்த உற்பத்தி தொழிற்திறனுடைய தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற செயின்ட் கோபைனின் உறுதிப்பாடு உண்மையிலேயே மெச்சத்தக்கதாகும். கல்வியாளர்கள் என்ற வகையில், நாங்கள் நம்முடைய மாணவர்களை இடைவிடாமல் அடையாளம் கண்டு அவர்களில் திறமைகளை வளர்த்து வருகிறோம். இந்த டுறுநு திட்டம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வாய்ப்பு வசதியற்ற வளரினம் பருவத்தினரை அடைந்து அவர்களுக்கு தொழிற்திறன்கள் மற்றும் கல்வி ஆற்றல் பெறச் செய்து, அவர்களை தொழிலுக்கு ஆயத்தமான தொழில்முறை வல்லுநர்களாக மாற்றுவதற்குரிய மீண்டும் மீண்டும் பின்பற்றுவதற்குரிய வழிப்பாதையை வழிகாட்டி எடுத்துக்காட்டியுள்ளது,” என்றார்.

டுறுநு-ன் முதல் வரிசை மாணவர்கள் தங்கள் டிப்ளமா பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததைக் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் தெற்காசியா, மலேசியா ரூ எகிப்து ஃபிளாட் கிளாஸ் பிரிவு தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சந்தானம் அவர்கள் கூறுகையில், ‘எல்லா கஷ்டங்களையும் தாண்டி இந்த திட்டத்தை வெற்றிகரமாக நீடிக்கச் செய்வதற்கு இந்த நான்காண்டுகள் சவால்மிக்கதாக இருந்தது. பட்டம் பெற்றவர்களுக்கு வெளிநிறுவனங்களில் சிறந்த வாய்ப்புகள் இருந்தபோதிலும்கூட அவர்களில் 49 பேர் நமது நிறுவனத்தில் சேருவதற்கு முடிவெடுத்தது மிகவும் மனநிறைவளிக்கக்கூடிய ஒன்றாகும். பாடமுறையை தொழிலிட அறிவாற்றலுடன் ஒன்றிணைக்கக்கூடிய அடுத்த தலைமுறை உற்பத்தித் திறமையை உருவாக்குவதற்கு நாட்டில் உள்ள தொழில்கள் டுறுநு மாடலை ஏற்பதற்கு, தொகுப்புகள் அமைப்பதற்கு, இணைப்பு பெறுவதற்கு, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முன்வரவேண்டும் என்று செயின்ட் கோபைன் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு மாநிலத்தில் ஒவ்வொரு தொகுப்பிலும் தலா 2000 மாணவர்களை பட்டதாரி ஆக்குவதற்கு 10 டுறுநு தொகுப்புகள் அமைக்கலாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த அதிக தொழிற்திறன் மற்றும் படித்த 20,000 திறமையாளர்கள் நாம் உற்பத்தி தொழிலில் இன்று எதிர்கொள்ளக்கூடிய கடும் இடைவெளியை இணைக்கக்கூடும்,” என்றார்.

செயின்ட் கோபைன் இந்தியா, கார்பரேட் சமூக கடமைப் பொறுப்பு – கிளாஸ் பிசினஸ் ரூ தலைiமை – செயின்ட் கோபைன் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள ஆதாரப் பிரிவு தலைமை திரு. பத்மகுமார் அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் முதல் டுறுநு வரிசைக்கு மாணவர்களை தேர்வுசெய்யும் முறையை தொடங்கியபோது, பெற்றோர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பை நாங்கள் எதிர்கொண்டோம். முடித்த பிறகு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்குவதோடுகூட குடும்பத்திற்கு பண உதவி ஒதுக்கீடு செய்யும் எங்களுடைய புதுமையான மாடலுடன் குடும்பத்துடன், தொடர்ந்து தொடர்பு கொண்டு பிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நாங்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை வெல்ல முடிந்தது. ஒழுங்குமுறை தவறாத பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்கள் மூலம் பெற்றோர்களால் நெருக்கமாக கண்காணிப்பு செய்வது பணி விலகல் வீதம் குறைவதற்கு பங்களித்தது. நம்முடைய வளரினம் பருவ மாணவர்கள் தன்னம்பிக்கையுறுதி உள்ளவர்களாகவும் மற்றும் தொழிலுக்கு ஆயத்தமான திறமையுள்ளவர்களாகவும் மாறுவதைக் கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை (Nவுவுகு) மேலாண்மை இயக்குநர் திரு. N. ரகுராஜ் அவர்கள் கூறுகையில், ‘நமது கல்வி முறையில் பாடமுறை அறிவை கற்பிப்பதோடு தொழிற்கூட பயிற்சி முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் நமது கல்வி முறையை மேலும் உறுதிப்படுத்த முடியும். மாணவர்களை தொழில்நுட்ப வல்லமையுடன் மென்பொருள் திறன்கள் உள்ளடங்கிய முழு கல்வியாற்றல் பெறச் செய்வதில் Nவுவுகு உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறது. செயின்ட் கோபைன் போன்ற ஒரு உறுதிபு+ண்ட கார்பரேட் கூட்டாளி நிறுவனத்துடன் ஒரு நன்கு உருவான நல்லுறவுக்கு இந்த ஆண்டு பட்டம் பெறக்கூடிய மாணவர்களின் தரமே ஆதாரச் சான்றாகும்,” என்றார்.

Skip to toolbar