தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு போட்டியில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது.

 

 

குருநானக் கல்லூரியில் 2ம் ஆண்டாக நடைபெற்ற தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு போட்டியில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 2ம் ஆண்டாக தேசிய மாணவர் படை சார்பில் கல்லூரி நிர்வாகம் நடத்திய கல்லூரி அளவிலான அணிவகுப்பு போட்டியில் சென்னையிலுள்ள 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 250 பெண்கள் உட்பட, 700க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று பரிசுகளும், கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜகோபாலன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

சிறப்பாக அணிவகுப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்திய தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி தேசிய மாணவர் படையினர் முதல் பரிசை வென்று வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றனர்.

இரண்டாம் பரிசினை சென்னை கிறிஸ்தவ கல்லூரி தட்டிச் சென்றது.

இதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் முகாம்களுக்கு பயிற்சி பெற அனுப்பப்பட்டு ஜனவரி 26 அன்று அணிவகுப்பில் பங்குபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

AD

Skip to toolbar