காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அதிமுக வில் இணைந்தார்.

தேதி : 9.3.2020

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும்,
மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம்
அவர்களை இன்று (9.3.2020 – திங்கட்கிழமை), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், SC துறை தலைவர் திரு. G. ஸ்டாலின், துணைத்
தலைவர் திரு. C. கணேஷ்குமார், ராதாபுரம் மேற்கு வட்டாரத் தலைவர் திரு. B. பாரத்,
திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர் டாக்டர் ரோஸ்பிரியங்கா;
தூத்துக்குடி மாவட்டம், SC துறை துணைத் தலைவர்களான திரு. A. வேல்குமார்
ஆத்தியப்பன், திரு. R, வெற்றிவேல் ரத்தினசாமி, ஆத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ்
முன்னாள் தலைவர் திரு. K, வேல்குமார் மற்றும் திரைப்பட இயக்குநர்
திரு. R, சத்யபிரகாஷ் உள்ளிட்ட 30 பேர் நேரில் சந்தித்து, அக்கட்சியில் இருந்து விலகி
தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
திரு, தச்சை N. கணேசராஜா, மாநிலங்களவை உறுப்பினர் திரு. S. முத்துக்கருப்பன்
மற்றும் திரு. S.K.M. சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

AD

Skip to toolbar