20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டது

 

 

அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டது.

சென்னை குருநானக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பவித் சிங் நய்யார் அவர்களின் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறாவது ஆண்டாக துவக்கி வைக்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை CSK அணி வீரர் அம்பத்தி ராயுடு கலந்து கொண்டு டாஸ் போட்டு முதல் போட்டியை துவக்கி வைத்தார்

இந்த போட்டியில் ஆண்கள் பெண்கள் என இரு குழுவாக மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. அனைவரும்வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிகழ்வு நான்கு விளையாட்டு மைதானங்களில்தொடர்ந்து 6நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசும் சிறந்த விளையாட்டு uவீரருக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வழங்கப்படும்.

Skip to toolbar