மனித நேய பண்பாளர் மெகா புத்தகம் வெளியிட்டு விழா

மனித நேய பண்பாளர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய மெகா புத்தகத்தை தமிழ்நாடு சுற்றுலா வாரியத்துறை அலுவலர் நெல்லை எஸ்.எஸ்.மணி எழுதினார். இந்த புத்தகம் கடந்த மாதம் மலேசியாவில் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடியில் மனித நேய பண்பாளர் மெகா புத்தகம் வெளியிட்டு விழா தூத்துக்குடி சிவன் கோவில் தெரு தனியார் காலேஜ் கூட்ட அரங்கில் நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மு.பாலகிருட்டிணன் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் எஸ்.சாமுவேல் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி நகர முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.மோகன் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு முன்னாள் மீன் வளர்ச்சி கழக வாரிய தலைவர் இரா.அமிர்தகணேசன் வெளீயிட இந்த புத்தகத்தை பானு பிருந்தாவன் ஹோட்டல் தொழில் அதிபர் தமிழ்செல்வன் ஆத்தூர் மா.மணி பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறை வெளியிட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாள் காட்டியை தமிழ் நாடு சுற்றுலா முன்னாள் வாரிய அலுவலர் நெல்லை எஸ்.எஸ் மணி வெளியிட எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறை பாண்டியன் ராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும், புத்தக வெளியிட்டு ஒருங்கினைப்பாளருமான சத்யா இலட்சுமணன், தொழில் அதிபர் ஜோதிமணி, தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறையை சார்ந்த ராமகிருஷ்ணன், பி.சி.மணி, நெப்போலியன், மிக்கேல், வின்சென்ட், பால்ராஜ், அண்ணாதுரை, முனியசாமி, தங்க மாரியப்பன், ஆபிரகாம், .மற்றும் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சிவா, ஜெயமணி, பொன்னம்பலம், உட்பட திரளான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி முபாலகிருட்டிணன், எஸ்.மோகன் சிறப்பாக செய்து இருந்தனர்.

Skip to toolbar