பன்றிகளால் பொதுமக்கள் மிகவும் சிரமம்

சிங்காநல்லூரில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.


சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படாத காரணத்தால் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. கழிவுகளை உண்பதற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பன்றிகள் சுற்றித் திரிவதாகவும் இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என அப்பகுதியில் உள்ள மக்கள் கூறியுள்ளனர். மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே பன்றிகள் வருவதை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை குப்பைகளும் சரிவர அள்ளப்படுவதில்லை என்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி என அறிவித்து திட்டங்கள் செயல் படுத்தப்பட்டாலும் குப்பைகளை சரிவர அகற்றுவது கால்நடை மற்றும் பன்றிகள் ரோடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அப்பகுதியில் கடை நடத்திவரும் சக்தி.

Skip to toolbar