பால் உபபொருட்கள் விற்பனைக்கு முகவர்கள் அணுகலாம்

கோவை மாவட்டத்தில்
ஆவின் பால், பால் உபபொருட்கள் விற்பனைக்கு முகவர்கள் அணுகலாம்
வடவள்ளி, டிச. 22
கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவன பால் மற்றும் பால் மூலம் தயாரிக்கப்படும் உப பொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்ய முகவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக தரப்பில் கூறியதாவது, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின் நிறுவனம்) ஆனது கோவை மாவட்டம், பேரூர் தாலுக்கா, பச்சாபாளையம், சிறுவாணி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.
கோவை ஆவின் நிறுவனத்திலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இலக்கை எய்திடும் வகையில் கோவை, பொள்ளாச்சி, அன்னூர் மற்றும் மேட்டுபாளையம் தாலுக்காக்களை உள்ளடக்கி கோவை மாவட்டம் முழுவதிலும் 11 தாலுக்காகளிலும் ஆவின் அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான ஆவின் பால், நெய், தயிர், பால்கோவா, பாதாம்பவுடர், காஜு கட்ரி, ஜஸ் க்ரீம், சாக்லெட் ஆகிய ஆவின் பால் உபபொருட்களை மக்களிடம் சென்றடையும் வகையில் மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்ய முகவர் வரவேற்கப்படுகிறார்கள்.
தகுதியின் அடிப்படையில் முகவர்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை முகவராக நியமிக்கப்படுவார்கள். எனவே, ஆவின் நிறுவனத்தில் முகவராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கோவை ஆவின் நிறுவனத்தின் இலவச அழைப்பான 1800 2544777 என்ற எண்ணிலும் அல்லது மேலாளர் (விற்பனை) – 94890 43715 / 0422 – 2545529 என்ற எண்ணிலும் மற்றும் aavincbemkg@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு தேவையான கூடுதல் விபரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Skip to toolbar