பிக் பஜாரில் ‘10 ஆண்டு விற்பனை முடிவு’ மெகா விற்பனை மேளா துவங்கியது டிசம்பர் 21 முதல் ஜனவரி 1 வரை

பிக் பஜாரில் ‘10 ஆண்டு விற்பனை முடிவு’
மெகா விற்பனை மேளா துவங்கியது
டிசம்பர் 21 முதல் ஜனவரி 1 வரை நடைபெறுகிறது
கோவை, டிச. 22-


பிக் பஜாரில் ‘பத்தாண்டு விற்பனை முடிவு’ மெகா விற்பனை மேளா டிசம்பர் 21-ந்தேதி துவங்கியது. இந்த விற்பனை மேளா வரும் ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2009-ம் ஆண்டு இருந்த அதே விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஹைப்பர் மார்க்கெட் துறையில் முன்னணியில் இருக்கும் பியூச்சர் குழுமத்தைச் சேர்ந்த பிக் பஜார் தற்போது ‘பத்தாண்டு விற்பனை முடிவு’ மெகா விற்பனை மேளாவை அனைத்து ஸ்டோர்களிலும் துவக்கி உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2009-ம் ஆண்டில் எந்த விலையில் பொருட்களை வாங்கினார்களோ அதே விலையில் பொருட்கள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
2009-ம் ஆண்டு சிறப்பு விற்பனை மேளாவில் உணவு, அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டிற்கு தேவையான பொருட்கள், லக்கேஜ், எழுது பொருட்கள், பொம்மைகள், நவநாகரீக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அடங்கும். புதிய 3 பர்னர் பிரெஸ்டிஜ் கியாஸ் ஸ்டவ் விலை 7295 ரூபாய் ஆகும். அதை வெறும் 3699 ரூபாய்க்கும், 999 ரூபாய் மதிப்புள்ள பாம்பே டையிங் பெட் ஷீட்டை 499 ரூபாய்க்கும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 செட் அரிஸ்டோகிராட் டிராலியை வெறும் 6999 ரூபாய்க்கும் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லலாம். இது போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஹபத்தாண்டு விற்பனை முடிவு’ திட்டம் குறித்து பிக் பஜார் தலைமை நிர்வாக அதிகாரி சதாசிவ் நாயக் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் பிக் பஜாரின் மாற்றங்கள், முன்னேற்றங்கள், புதிய ஸ்டோர்கள் துவக்கம், அற்புதமான சலுகைகள், பரந்து விரிந்து பொருட்கள் என பல்வேறு விஷயங்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது. இந்த 10 ஆண்டு முடிவில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 2009-ம் ஆண்டு விலையில் ஷாப்பிங் செய்வதற்கான ஒரு பழைமையான பயணத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பிராண்ட்களை பிக் பஜாருக்கு வந்து வாங்கிச் செல்லுமாறு நாங்கள் அழைக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த சிறப்பு விலையை தாண்டி, இந்த விற்பனை காலத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக 400 ரூபாய் வீதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கும் கோடக் மகிந்திரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
பிக் பஜார்
இந்தியாவில் ஹைப்பர் மார்க்கெட் துறையில் முன்னணியில் இருக்கும் பியூச்சர் குழுமத்தைச் சேர்ந்த பிக் பஜார் நாடு முழுவதும் 100 நகரங்களில் ஸ்டோர்களை கொண்டுள்ளது. ‘அழகான இந்தியாவை உருவாக்குதல்’ என்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். பிக் பஜாரில் அனைத்து தயாரிப்புகளும் நல்ல தரம் வாய்ந்தவையோடு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ‘குறைந்த விலையில் அதிக பொருட்கள்’ என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பெரும்பாலான இந்திய நுகர்வோர்கள் எதிர்பார்க்கும் அனைத்து பொருட்களும் இங்கு உள்ளன. ஒவ்வொரு முக்கிய காலங்களிலும், விழாக் காலங்களிலும் பல்வேறு சலுகைகளோடு தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதில் முன்னணி ஸ்டோராக பிக் பஜார் திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Skip to toolbar