பிஎஸ் பிபி மில்லினியம் பள்ளியின் பாரதிய சம்ஸ்கிருதி முதன்முறையாக மார்கழி மாதத்தில் ரசமயி சந்தியா நிகழ்ச்சி

 

 

 

கெருகம்பாக்கத்தில் உள்ள பிஎஸ் பிபி மில்லினியம் பள்ளியின்


பாரதிய சம்ஸ்கிருதி முதன்முறையாக மார்கழி மாதத்தில் ரசமயி சந்தியா நிகழ்ச்சியில் நடிகரும் நாடக கலைஞருமான திரு.ஒய்.ஜீ மகேந்திரன் அவர்களால் வெகு விமரிசையாக தொடங்கப்பட்டது இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக
நாடகம் நடிப்பு நடனம் பாட்டு என பல கலைகளும் சங்கமிக்கும் இடமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசித்து மகிழும் படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னை மிகப்பெரிய நகரமாக மாறிவரும் இந்நிலையில் தென் சென்னையிலும் கலைகள் வளரும் இடமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிரேசி,மது பாலாஜி, அவர்களின் நாடகமும், விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் சர்வானின் இசைக் கச்சேரியும், சியாம் மற்றும் ஜெகன் கிருஷ்ணாவின் நடிப்பும்
போன்ற ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளும் ரசமயி சந்தியாவில் நடக்க உள்ளன தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் வீதம் நடைபெற உள்ளது இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பள்ளியின் ரோட்டரி இன்ட்ரா கிளப் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லத்திலிருந்தும் விருந்தினர்கள் அழைக்கப்படுகிறார்கள் சுமார் 100 இருக்கைகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

ரசமயி சந்தியா
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வு மேலாளர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் ஆஸ்ட்ரல் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்
திரு.அன்சுமன் ஐயங்கார். அவர்கள் கலந்துகொள்கிறார்கள் இங்கு வந்து நிகழ்ச்சிகளை காண்பதற்கு வடபழனி பேருந்து நிலையம் மற்றும் கிண்டியில் உள்ள பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளியில் இருந்தும் இலவசமாக வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AD

Skip to toolbar