உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதா

 

 

 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக இளைய தலைமுறை மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது…

சென்னையில் இளைய தலைமுறை கட்சி தலைவர் ஜெய் பழனியப்பனின் பிறந்தநாள் விழா நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பிறந்தநாள் விழாவில் செய்தவர்களை சந்தித்த இளைய தலைமுறை மக்கள் கட்சியின் தலைவர் பழனியப்பன் பேசுகையில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மீதி உள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்பதாகவும் தேர்தலை எதிர்கொள்ள திமுக பயப்படுகிற காரணத்தாலேயே உள்ளாட்சித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார் இளைய தலைமுறை மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தி போட்டியிட இருப்பதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் தொண்டர்களிடம் இருந்து பெற்று இருப்பதாக தெரிவித்தார்.

AD

Skip to toolbar