19 ஆயிரம் சதுர அடியில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஸ்டோர் திறப்பு

கோவையில் 19 ஆயிரம் சதுர அடியில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஸ்டோர் திறப்பு
கோவை, டிச. 2
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஸ்டோரை கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் திறந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் பொருட்கள், சமையல் அறை பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும். ஆண்டு முழுவதும் இந்த ஸ்டோரில் அனைத்து பொருட்களும் 5% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். கூடுதல் சலுகையாக குறைந்தபட்சம் 1499 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் 1 கிலோ சர்க்கரை 9 ரூபாய் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்டோரில் நாள்தோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 12 இடங்களில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் செயல்பட்டு வருகிறது. கோவையில் 18,576 சதுர அடியில் திறக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Skip to toolbar