கேபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மினி மாரத்தான் போட்டி

கேபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மினி மாரத்தான் போட்டி
கோவை, டிச. 2
கேபிஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் 6வது மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.
கேபிஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் பொது மக்களிடையே சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு மினி மாராத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
6வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி வாழ்வாதாரத்திற்கு மரங்கள் முக்கியம் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்டது.
மொத்தம் 6 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில், 5 கிலோ மீட்டர் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளை லிட்ரஸி மெட்ரிக்குலேசன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சவுந்திரராஜன், பெண்கள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான போட்டிகளை கருமத்தம்ப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், பெண்கள் பொதுபிரிவு போட்டிகளை ஏஆர்சி மெட்ரிக் பள்ளி முதல்வர் பி.காந்திமதி, கேபிஆர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான போட்டியை கேபிஆர் நிறுவனங்களின் தலைமை அதிகாரி பி.ரங்கநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் 8 கிலோ மீட்டர் பிரிவில் ஆண்கள் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளை ராயல்கேர் மருத்தவமனையின் தலைமை அதிகாரி பி.கிருஷ்ணானந்தா, ஆண்கள் பொதுபிரிவு போட்டிகளை கிட்டாம்பாளையம் 195-எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரி கமலேஜ் குமார் ஆகியோரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் அகிலா வரவேற்று பேசினார். கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் எஸ்.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் தலைவர் கே.பி.ராமாசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றும் போது, அடுத்த தலைமுறை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நாம் ஏதாவது விட்டுச்செல்ல வேண்டும் என்றால் அது மரங்களே, இதை உணர்ந்தே கேபிஆர் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், “தமிழ் தலைவாஸ்” கபடிக் குழுவின் வீரர் யு.அஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வி.தம்பிதுரை நன்றி கூறினார்.

Skip to toolbar