நூதன முறையில் மோசடி

நூதன முறையில் மோசடி
கோவை. நவ.30


கோவை கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் இவர் தன்னை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி என்று கூறிக்கொண்டு வாகராயம்பாளையம் கிட்டாம்பாளையம் உப்பிலிபாளையம் தென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம பொது மக்களிடம் பட்டா வாங்கி தருவதாக மின்இணைப்பு பெற்றுத் தருவதாகும் இறப்பு பிறப்பு மற்றும் குடும்ப அட்டைகளை பெற்று தருவதாக கூறி ஏராளமான பணத்தை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யாமல் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இவர் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது அவ்வாறு ஆவணங்களை பெற்று பணம் கொடுக்க முடியாதவர்களின் வீட்டுமனைகள் பூமிகள் மீது பொய் புகார்கள் எழுதி பணத்தைக் கேட்டு மிரட்டுவது இவரது வாடிக்கை அவ்வாறு பணம் கொடுக்க முடியாதவர்களின் சொத்துக்கள் நகல் எடுத்து அதில் ஏதாவது ஒரு குறைகளை எழுதி அனைத்து அரசு அதிகாரிக்கும் பெட்டிஷன் போடுவது ஒரு வழக்கம் இவரை இப்பகுதியில் பெட்டிசன் குமார் என்றும் குண்டு குமார் என்றும் அழைக்கப்படுகிறது இது போன்று நாள்தோறும் அப்பகுதி மக்களை மிரட்டி அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது இவருக்கு பணம் கொடுக்காதவர்கள்மீது பெட்டிசன் போடுவது வாடிக்கை இந்நிலையில் ராயர பாளையத்தை சேர்ந்த சந்தானலட்சுமி என்ற பெண் தனது கணவர் இறந்து விட்டதால் இறப்பு மற்றும் வாரிசுசான்று பெற்று தருமாறு சிவகுமாரை நாடியுள்ளார் அதற்கு ரூ 60,000 ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார் அதன்பின் சந்தான லட்சுமியின் கணவர் சொந்தமான பூமி பட்டா பெயர் மாறுதலில் பெற்று செய்து கொடுக்க வேண்டுமென்றால் அசல் ஆவணங்கள் வேண்டும் என்று கேட்டு 5 பத்திரங்களை வாங்கிக் கொண்டார் பலமுறை கேட்டும்நான்கு பத்திரங்களை மட்டும் கொடுத்துள்ளார் மீதமுள்ள ஒரு பத்திரத்தை கேட்கும்பொழுது 10 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே வழங்குவேன் இல்லையென்றால் கொடுக்க மாட்டேன் என்று கோவையில் உள்ள ஒரு வக்கீல் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார் இந்நிலையில் நேற்று வாகராயம்பாளையம் தில் சிவகுமாரை சந்தித்து கேட்டபோது பத்திரத்தை கொடுக்க முடியாது 10 லட்சம் கொடுத்தால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறி மிரட்டல் விடுத்து அருகிலுள்ள உள்ள இரும்பு கம்பி எடுத்து சந்தானலட்சுமி தாக்கமுற்பட்டுள்ளார்இதில் அப்பகுதியை சேர்ந்த ரத்தினசாமி மற்றும் கருப்புசாமி தடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் இதனால் மனரீதியாக பாதிக்கபட்ட சந்தானலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் சிவக்குமாரை விசாரணை செய்து சிறையில் அடைத்தனர் இவர் மீது ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இவர் இது போன்று பல ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்திய மிரட்டியும் பணம் பெற்று வருவது குறித்து ஏராளமான பொதுமக்கள் புகார் அளிக்க முன் வந்துள்ளார்கள்

Skip to toolbar