மாநகராட்சி நிர்வாகத்தைக் கணடித்து தி.மு.க.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கணடித்து தி.மு.க.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை.நவ.29

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “சூயஸ்”பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்ட 26 ஆண்டுகாலக் குடிநீர்ப் பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரியும் கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம். எல். ஏ. தலைமையில் காவல் துறையின் தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3000 &த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம்(செஞ்சிலுவைச் சங்கம் அருகில்)பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தனியார் நிறுவனமான “சூயஸ்”, உடன் போடப்பட்ட 26 ஆண்டுகால குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், குண்டும்,குழியுமான சாலைகள், சுத்தப்படுத்தப்படாத சாக்கடைகள்,புதர்கள் மண்டிக் கிடக்கும் பூங்காக்கள், எரியாத தெருவிளக்குகள் போன்ற கோவை மாநகராட்சியின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரியும், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம். எல். ஏ. தலைமையில் காவல் துறை தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில் , கோவை மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு ,26 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது. மக்களின் ஜீவாதாரமாக திகழக்கூடிய குடிநீர் பராமரிப்பு மற்றும் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ செய்ய வேண்டுமே தவிர தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த பராமரிப்பு ஒப்பந்தம் அளிக்கக் கூடாது என்றார்.
மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வட்டங்களிலும் சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி நின்று பல தொற்றுநோய்கள் பரவக்கூடிய அவலநிலை உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சங்கனூர் ஓடைகள், நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகள் தூர்வாரப்படாமல் பெரும் மழையால் ஓடைகளின் கரைகள் உடைந்து பல இடங்களில் ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற வீடுகளுக்குள் சாக்கடை நீர் உடன் மழை நீரும் கலந்து புகுந்து பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி ஆணையாளரை பலமுறை நேரில் சந்தித்தும், கடிதங்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை”. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் , வடக்கு மாவட்டத் துணைச்செயலாளர் வடவள்ளிதுரைசாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, அ.நந்தகுமார், ச.குப்புசாமி, மெட்டல் மணி , மு.கா.உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் மா.மகுடபதி, மு.மு.ச.முருகன், சி.வி. தீபா, சி.டி.டி. ராஜராஜேஸ்வரி பாபு, தீர்மானக்குழு இணை செயலாளர் மு.முத்துசாமி, தீர்மானக்குழு மு.இரா.செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் வ.ம.சண்முகசுந்தரம், ஆர்.எம்.சேதுராமன், வெ.கோவிந்தராஜ், எஸ்.எம்.சாமி, மார்க்கெட் எம்.மனோகரன், கோவை லோகு, மதியழகன் , மீனா ஜெயகுமார் , வி.பி.செல்வராஜ், குனியமுத்தூர் லோகு, மற்றும் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, குறிச்சி பிரபாகரன், கார்த்திக் செல்வராஜ், அணிகளின் அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ்,தொண்டரணி கண்ணன், சு.ஜெயகுமார், ரகுமான், எம்.எஸ்.எம்.தங்கவேல், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், எம்.எஸ்.ராமமூர்த்தி, தமிழ் மறை, கோவை கே.ஆர்.ராஜா, சரஸ்வதி புஷ்பராஜ், மாலதி, மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,கழக உடன்பிறப்புகள், செயல் வீரர்கள்,கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட மூன்றாயிரத்திற்கும் ( 3000 ) மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Skip to toolbar