சரவணம்பட்டியில் டாக்டர் முத்தூஸ் பல்துறை மருத்துவமனை இரண்டாவது கிளை

 

 

 

கோவை சரவணம்பட்டியில் டாக்டர் முத்தூஸ் பல்துறை மருத்துவமனை
கோவை, டிச. 1:


கோவை ஒண்டிப்புதூரில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை கோவை சரவணம்பட்டியில் தனது இரண்டாவது கிளையாக டாக்டர் முத்தூஸ் பல்துறை மருத்துவமனையை அமைத்துள்ளது. இதன் துவக்கவிழா 1.12.2019காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் நடைபெற்றது.
இதை, முத்தூஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் முத்துசரவணக்குமாரின் தாயார் வேலம்மாள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். டாக்டர் பிரேமா பெற்றோர் டாக்டர்கள் சிவசுப்ரமணியன், அருணா ஆகியோர் ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தனர். விழாவில் கிருஷ்ணாபுரம் செல்லையா தேவர், தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன், சரஸ்வதி, ராமலிங்கம், ஆசிரியர் விஜயராணி, செல்வகுமார், சாந்தி, ராஜ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், தஞ்சை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயராணி, செந்தூர் கார்டியாக் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் கயல்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து முத்துசரணவணக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது : இப்புதிய மருத்துவமனையில் கேத்லேப், உலகத்தரம் வாய்ந்த அவசர சிகிச்சை பிரிவு, 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு, 7 மிகப்பெரிய அறுவை சிகிச்சை அரங்குகள், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ அல்ட்ரா சவுண்ட், எண்டோஸ்கோபி அன்ட் மைக்ரோஸ்கோபி டிரட் மில் மற்றும் எக்கோ ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் இங்கு எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, விபத்து காய தீவிர சிகிச்சை, இருதயவியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, இரைப்பை குடலியல், கதிரியக்கவியல், சிறுநீரக பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது மருத்துவம், நுரையீரல் பிரிவு, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு, புற்று நோய் பிரிவு ஆகிய சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. இதற்காக இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழுவினர் இருப்பது கூடுதல் சிறப்பாகும். அதுமட்டுமல்லாது இரண்டு வருடங்களாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு காயம் ஏற்படும் காளையர்களுக்கு எங்கள் முத்தூஸ்மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அனைவரும் நலத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் பிரேமா ஏற்பாடு செய்திருந்தனர்.

Skip to toolbar