இளம்பருவ மாணவர்களுக்கு மனநலம் குறித்த சர்வதேச கருத்தரங்கு

இளம்பருவ மாணவர்களுக்கு மனநலம் குறித்த சர்வதேச கருத்தரங்கு
கோவை, நவம்பர்.30


மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான பாக்யலட்சுமி ஆறுமுகம் இன்ஸ்டிடியூட் பீமான்ஸ் அமெரிக்காவின் ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைகழக மருத்துவமனையும், இணைந்து இளம்பருவ பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாடு குறித்தான கருத்தரங்கினை நடத்தியது. இதில் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை டாக்டர் நல்லா.ஜி.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன், கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டீன் டாக்டர் அன்பு அறவழி மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் வி.குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மனோவியல் துறையைச் சேர்ந்த முதுகலை கல்வி இயக்குனர் டாக்டர் டிமோதி சலிவன், குழந்தைகள் மற்றும் வயதுவந்தோர் மனநலத் துறை இயக்குனர் டாக்டர் பெங்பேங், நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி பேராசிரியர் டாக்டர் பெர்ட்ராண்டட வின்ஸ்பார்க், சென்னையில் உள்ள தி பன்யன் அமைப்பின் இயக்குனர் டாக்டர் கிஷோர்குமார் ஆகியோர் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநலம் தொடர்பான பிரச்னைகள் பற்றி உரையாற்றினார். மனநல பிரச்னைகளை பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள உதவியாக அதற்கான வழிகள் மற்றும் முறைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். மனநலசேவைகள் அளிப்போர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் இத்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் சாஷி இளங்கோவன் அறக்கட்டளை நிதியுதவியுடன் பீமான்ஸ் ஒரு அதிநவீன மனநல மையத்தினை கோவையில் அமைக்க உள்ளார்கள். மனநலம் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அதற்கான சிகிச்சைகள் ஆகிய துறைகளில் பிமான்ஸ் உடன் இணைந்து சிலதிட்டங்களை செயல்படுத்து ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனை விருப்பம் தெரிவித்துள்ளது. கோவையில் கட்டப்பட்டு வரும் அதிநவீன மனநல மருத்துவமனை இப்பகுதி மக்களுக்கு சிறந்த முறையில் மனநல சேவைகளை ஆற்றவுள்ளது என்று சாஷிஇளங்கோவன் அறக்கட்டளை தலைவர் டாக்டர் நடராஜன் இளங்கோவன் தெரிவித்தார்.

Skip to toolbar