கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு
கோவை,நவ.30


கோவை மருத்துவ மையம் மற்றும் (கே.எம்.சி.எச்) மருத்துவமனை இணைந்து பக்கவாதம், மற்றும் அதன் பாதிப்புகள், அதனால் ஏற்படும் ஆபத்துகள், இளைஞர்கள் மற்றும் பெண்களில் அதிகரித்து வரும் சம்பவம்ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் கதிரியக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் பேசும்போது, “எங்களது மருத்துவத்துறையில் ஒவ்வொரு நாளும் 4 பக்கவாதம் நிகழ்வுகளை நாங்கள் காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு இல்லாதிருப்பதே ஆகும்.
இதனால் நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டியுள்ளது. சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ மற்றும் கதிரியக்கவியல் துறை போன்ற சேவைகளைக் கொண்டிருக்கவில்லை. இது சிகிச்சை நேரத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த காலதாமதத்தினால் சில நேரங்களில் நோயாளிகள் மரணத்தை தழுவுவதும் நிகழ்கிறது.
பக்கவாதம் ஏற்பட்டவுடன் அதற்கு தயாராக பக்கத்தில் உள்ள மருத்துவமனையை விரைவாக அடையவேண்டும். பெண்கள் புகைபிடிப்பவர்கள், ஆரம்பகால கருப்பை நீக்கம், ஆரம்ப மாதவிடாய் நிறுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றால் பெண்கள் மற்றும் இளைஞர்களில் பக்கவாதம் அதிகரித்துள்ளது. இதற்கான சேவையைத் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இதில் ஸ்டோர்க் எண் 95665 95665 என்ற எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்

Skip to toolbar