
உள்ளாட்சி தேர்தல் வருவதையொட்டி கோவை அ.தி.மு.க.இதயதெய்வம் மாளிகையில் விருப்ப மனு தாக்கல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருவதையொட்டி கோவை அ.தி.மு.க.இதயதெய்வம் மாளிகையில் விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது. இதில் கே.உலகநாதன் (கோவை மாநகர் 56-வது வட்டம்) விருப்ப மனுவை நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சித் துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் தாக்கல் செய்தபோது எடுத்தபடம். அருகில் கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், சி.டி.சி.ஜப்பார், வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர். ஜி.அருண்குமார் உட்பட பலர் உள்ளனர்.