கோவை நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் பூமி பூஜை

 

 

கோவை நல்லறம் அறக்கட்டளையின் சார்பில்
பூமி பூஜை
கோவை. நவம்பர் 15-
கோவை நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னனூர் கிராமத்தில் அமைந்துள்ள 22-ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குட்டையை தூர்வரும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது.
விழாவில் நல்லறம் அறக்கட்டளை மற்றும் அம்மா IAS அகாடமி-யின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் கலந்துகொண்டு குடிமராமத்து பணியினை துவக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்…
“இந்த குட்டையை ஒரு மீட்டர் ஆழத்திற்கு தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல் கரையையும் பலப்படுத்தி, 5000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது…
மேற் கூறிய இந்த பணிகள் அனைத்தும் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு தூர்வாரி முடித்த பின் இந்த குட்டையில் கொள்ளளவில் கூடுதலாக 4 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இதனை சுற்றியுள்ள கிராம மக்களும், வேளாண் குடிமக்களும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar