ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிதியுதவி

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிதியுதவி
கோவை.நவம்பர்.13
கோவை

கோவையில் ஏழை மாணவிக்கு கல்லூரியில் படிப்பதற்கான உதவி தொகையினை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வழங்கினர்.

ஆண்டுதோறும் வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் படிப்பிற்கான உதவி தொகையினை ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கோவை மாவட்டத்தில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.இதே போல் இந்த ஆண்டு கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஏழை எளிய மாணவியான உதயகுமாரி என்ற மாணவிக்கு ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலின் வளாகத்தில் முதல் உதவி தொகையாக 25ஆயிரம் ரூபாயை திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர் மதுவந்தி வழங்கினார்.மேலும் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்த மாணவிக்கு அனைத்து செலவுகளையும் ரஜினி மக்கள் மன்றமே ஏற்று கொள்வதாகவும் தொடர்ந்து உதவி தொகையினை வழங்கியதிற்கு கல்லூரி மாணவி உதயகுமாரி நன்றி தெரிவித்தார்.

AD

Skip to toolbar