தா வெள்ளையன் பரபரப்பு பேட்டி

 

 

 

மத்திய அரசும் மாநில அரசும் அடிமையாகத்தான் இருக்கிறது
தா வெள்ளையன் பரபரப்பு
பேட்டி

அரசாங்கமே உள்ளூர் சில்லறை வணிகத்தை அழிக்க ஆன்லைன் வணிகத்தை ஆதரிக்கிறது

சென்னை அடையாறில் அடையாறு டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறப்பு விழாவில் வணிகர் சங்கத் தலைவர் தா.வெள்ளையன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார் பிறகு செய்தியாளரிடம் கூறியதாவது

தமிழக அரசிடம் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் சார்பாக பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம் நாங்கள் வைக்கும் கோரிக்கைக்கு செவிசாய்க்கமலே இருக்கிறார்கள்
அரசாங்கமே உள்ளூர் சில்லறை வணிகத்தை அழிக்க ஆன்லைன் வணிகத்தை ஆதரிக்கிறது

ஆன்லைன் வர்த்தகதால் சிறுகுறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் மத்திய அரசும் மாநில அரசும் வெளிநாட்டவர்கள்களுக்கு ஏஜெண்டாக மாறிவிட்டார்கள் இவர்களுக்கு பிற்காலத்தில் எட்டப்பன் என்ற பெயர் வரும்
இனிமேலும் ஆன்லைன் வர்த்தகம் வந்துகொண்டுதான் இருக்கும் இவர்கள் அடிமை சாசனம் எழுதி கொடுத்திருக்கிறார்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்
ஆகையால் இனிமேலும் வரும்
இவர்கள் கேட்கமாட்டார்கள்..
இவ்வாறு அவர் கூறினார்…

Skip to toolbar