இந்தியாவில் நிதி வளர்ச்சி சூழலை உருவாக்க இந்திய பைன்டெக் திருவிழா

இந்தியாவில் நிதி வளர்ச்சி சூழலை உருவாக்க இந்திய பைன்டெக் திருவிழா

மும்பை பைன்டெக் ஹப் மற்றும் பைன் டெக் கன்வெர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து இந்தியாவின் நிதி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த இயற்கை சூழலை உருவாக்க இந்திய பைன்டெக் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதில், நிதி தொழிலில் உள்ள சவால்கள், வாய்ப்புகள், தீர்வுகள் பற்றி விவாதிக்கவுள்ளன. ‘இந்திய நிதி தொழில்நுட்ப திருவிழா 2020’ மகாராஷ்டிரா அரசு பங்கேற்கிறது.

இந்திய பைன்டெக் திருவிழா மார்ச் 2020 முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 50 நாடுகளிலிருந்து 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். நிதி ஒழுங்குமுறை அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். விழாவின் ஆலோசனை கமிட்டியில், மகாராஷ்டிரா அரசின் பைன்டெக் அதிகாரி சுனிதா நந்தா, பைன்டெக் கன்வெர்ஜன்ஸ் கவுன்சில் தலைவர் நவீன் சூர்யா, ரிசர்வ் வங்கி முன்னாள் செயல் இயக்குனர் ஜி.பத்மநாபன், இந்திய நேஷனல் பேமென்ட் கமிஷன் நிர்வாக இயக்குனர் திலிப் அஸ்பெ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Skip to toolbar