துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக் கூட்டம்

*துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் பங்கேற்ற தமுமுக – மமக நிர்வாகிகள்*

*பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு சம்பந்தமாக இன்று ஓசூரில் துணை* *காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி மீனாட்சி DSP அவர்களின் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் லஷ்மண தாஸ், துனை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்*.
*ஓசூரில் சட்ட ஓழுங்கை பாதுகாக்க ஓத்துழைப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைத்தார்கள்*

*அமைதிக்கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ஏஜாஸ் கான் ஊடகப்பிரிவு செயலாளர் அல்தாப் ,தலைமை கழக பேச்சாளர் நவுஷாத்,நகர தலைவர் பேட்டு,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப்,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அப்சர்,பொருளாளர் இர்பான்,ஏஜாஸ் உட்பட நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.*

*ஓசூரில் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பர்களை கண்டறிந்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஓசூரில் அமைதியான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு உறுதுனையாக செயல்படுவோம் எனவும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.*

*தமுமுக ஊடகப்பிரிவு*
*கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்.*

Skip to toolbar