ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி

குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி
கோவை. நவ.7


ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவியை கண்டுபிடித்தார் கோவை தொழில் அதிபர். அந்த கருவியின் உதவியோடு எப்படி குழந்தைகளை காப்பாற்றுவது என்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
HOS என்றும் அழைக்கப்படும் இந்தக் கருவியின் செயல் முறை விளக்கத்தை கோவை வடவள்ளி கல்வீரம் பாளையத்தில் உள்ள சௌடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் HOS- (HANDS OF SUJITH) என்ற தொழில்நுட்ப கருவியை பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்கு கோவையை சேர்ந்த தொழில் அதிபர் டி .நவநீத் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி 3 அடி அங்குலம் உள்ளதால் எந்த சிறு ஆழ்துளை கிணற்றுக்குள் எளிதில் சென்று குழந்தையை மீட்கும் திறன் உள்ளது.
இந்த கருவி சிறிய வடிவில் உள்ளதால் குழந்தையை மீட்கும் போது எந்தவிதமான மண்சரிவுவும் ஏற்படாது.
இந்த கருவி எளிய வடிவில் இருப்பதால் இந்த கருவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிதில் குழந்தைகளை காப்பாற்றி விடலாம்.
இந்த கருவியை விட நூறு மடங்கு செயல்திறன் கொண்ட ஒரு கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,இந்தப் புதிய கருவி ஓரிரு மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் புதிய கருவியை ஆழ்த்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் தன்னார்வ குழுவிற்கும் இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,
நமது அரசாங்கம் ஆழ்குழாய் கிணறுகளில் நேரும் இத்தகைய விபத்துகளை தடுக்க சில எளிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள்தோறும் பயன்பாட்டில் இல்லாத திறந்த நிலையில் உள்ள ஆழ்த்துளை கிணறுகளை கணக்கு எடுக்க வேண்டும் என்றும்,
இவ்வாறு கண்டறியப்பட்ட ஆழ்த்துளை கிணறுகளை மூட மாவட்டம்தோறும் தனி குழுக்களை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வ நிறுவனங்களும் தங்களை இணைந்து கொண்டு அரசாங்கத்திற்கு உதவிட வேண்டும். தீயணைப்புத் துறையில் ஒரு சிறப்பு பிரிவிற்கு ஆழ்த்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும்,
பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை முறையாக மூடி அதை வீடியோ எடுத்து 9486976099 எண்ணிற்கு பகிர்ந்தால் அவர்களுக்கு தக்க சான்றிதழும்,பரிசும் வழங்கப்படும்.
இந்த கருவிக்கு HOS- (HANDS OF SUJITH) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, இந்த கருவியில் இனிமேல் இதுபோன்ற ஒரு விபத்து நடக்காதவண்ணம் தடுக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் பள்ளி தாளாளர் சீனிவாசன், கவிஞர் “மரபின் மைந்தன்” முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar