அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும்
முகாமில்

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்.

கோவை நவம்பர் 05

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பொதுமக்களிடம் இருந்து
மனுக்களை பெற்றுக்கொண்டு 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில்
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில், மாவட்ட
ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா இராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிச்சாமி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) சுரேஷ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்
சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)
செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர்
மகேஷ்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து
கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும்
சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழக மக்களின்
நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால்
சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மென்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு
முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாவட்ட
ஆட்சித்தலைவர் தலைமையில், அனைத்துதுறை உயர் அலுவலர்களைக்
கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள்
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு
குறை தீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி குறைதீர்க்கும்
நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 110 விதி -கீழ் 18.07.2019 அன்று
அறிவித்திருந்தார்கள். இந்த சிறப்புத் திட்டத்தை செம்மையாக நடைமுறைபடுத்துவதற்கு ஒரு
வட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை / நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர்
குழுவின் மூலம் மனுக்கள் பெறப்படும். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில்
பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும்.
அம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். அதனடிப்படையில் இன்று பெரிநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. இங்கு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.
பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின்
அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம்
மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும். மேலும், இத்திட்டம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்புத் திட்டமாக திகழ்கின்றது இன்று நடைபெறக்கூடிய சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 130 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் ரூ.1.3கோடி மதிப்பிலும், வருவாய் துறையின் மூலம்
48 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் ரூ.19.75 இலட்சம்
மதிப்பிலும், 4 பயனாளிகளுக்கு இயற்கை மரண நிவாரணத்தொகை மற்றும் 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.85,000/-மதிப்பிலும்,
பழங்குடியினர் சாதி சான்றிழ்கள் 24 பயனாளிகளுக்கு, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் ரூ.28,152/- மதிப்பிலும், மகளிர் திட்டத்தின் மூலம் 100 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் மற்றும் 23 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி ரூ.88.20இலட்சம் மதிப்பிலும், 39 பயனாளிகளுக்கு பேட்டரி இருசக்கர வாகன மானியம் ரூ.96.81இலட்சம் மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் ரூ.6.88 இலட்சம் மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் மூலம் 7
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ரூ.65,000 மதிப்பிலும்,
தோட்டக்கலைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ரூ.1.85இலட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் சிறப்பு உபகரணங்கள் ரூ.15840/- மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 1 பயனாளிகளுக்கு சிஎன்சி இயந்திர தளவாடங்கள் தயாரிக்க கடனுதவி ரூ.38.50 இலட்சம் மதிப்பிலும், தாட்கோ மூலம் 12 பயனாளிகளுக்கு தொழில்
துவங்க கடனுதவி ரூ.12.13 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் துறையின்
மூலம் குடும்ப அட்டைகள் 25 பயனாளிகளுக்கும், மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் தொழில் துவங்க கடனுதவி 2 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 17 பயனாளிகளுக்கு இயற்கை மரண
நிவாரணத்தொகை மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலை ரூ.3.07 இலட்சம் மதிப்பிலும், வட்டார வளர்ச்சி துறையின் மூலம் பசுமை வீடு மானியம் 4 பயனாளிகளுக்கு ரூ.8.4 இலட்சம் மதிப்பிலும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.5.1இலட்சம் மதிப்பிலும், 10 பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை ரூ.2.5இலட்சம் மதிப்பிலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் மூலம் சொத்து வரி பெயர் மாற்றம் 12 பயனாளிகளுக்கும், புதிய குடிநீர் இணைப்புகள் 47 பயனாளிகளுக்கும், மனைவரன் முறைப்படுத்துதல் 5பயனாளிகளுக்கும் என மொத்தம் 530 பயனாளிகளுக்கு ரூ.4.51கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 192 கோடி மதிப்பீட்டில் காந்திபுரம் முதலடுக்கு
உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்ட மேம்பாலப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சி
முதல் ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி,
ரூ.215.51 கோடி மதிப்பில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் அமைக்கும்
பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.130.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (விமான நிலையம்) வரை ரூ.1000 கோடி மதிப்பில் பாலம் அமைக்க ரூ.3.40கோடி மதிப்பில் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இருகூர் முதல் போத்தனூர் மற்றும் இருகூர்
முதல் பீளமேடு இரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.58.80 கோடி மதிப்பில் மேம்பாலம். மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலைவசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 பாலங்கள் ரூ.135.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.20.34 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கட்டிடம், ரூ.4.45கோடி மதிப்பில் மதுக்கரை மற்றும் பேரூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படப்பட்டுள்ளன. இதுபோல எண்ணற்ற திட்டங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும், அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் இளைஞர் அணி கே.ஆர் ஜெயராமன், ராஜேந்திரன், பாரதி, ஜெகன், கே.ஆர். சின்னு, வனிதாமணி, உதயகுமார், ராசு, ராஜேந்திரன், கோவனூர் துரைசாமி, கோவனூர் துரைசாமி, சுப்பிரமணி, எஸ்.ஆர் அர்ஜுனன், ஆனந்தன், சாந்தி சண்முகசுந்தரம், ராமச்சந்திரன், ஆனந்தன், ரவி, சரவணன், ராமு, உஷாமால், சுபத்ரா புருசோத்தமன், சதீஷ்குமார், சுகுமார் , மணி, மாரிமுத்து, கவி சந்திரமோகன், சாரதா சண்முகம், நவமணி, ராதிகா, மாணிக்கம், சேவல் சண்முகம் ,தேவராஜ் உள்பட கழக நிர்வாகிகள் மட்டும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

AD

Skip to toolbar