பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

பட்டணம் ஊராட்சியில்
பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
கோவை, நவம்பர்.7-
கோவை பட்டணம் ஊராட்சிக்குட்பட்ட நாகம்மநாயக்கன்பாளையத்தில் ஜனனி பார்ம்ஸ் மற்றும் ராயல்கேர் மருத்துவமனை சார்பில் 10.000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இது குறித்து ஜனனி பார்ம்ஸ் நிறுவனர் வெள்ளானைப்பட்டி தங்கவேல் கூறும்போது : -&

நாகம்மநாயக்கன்பாளையத்தில் ஜனனி பார்ம்ஸ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இன்று (7.11.19) அன்று 10,000 மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளோம். இந்த விழாவில் தேக்கு, வேங்கை, ஈட்டி, மகாகனி, மா, நெல்லி, குமிழ் தேக்கு, நாவல், மகிழம், தரக்கொன்றை உட்பட 20 வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், பொள்ளாச்சியில் 2500 மரக்கன்றுகள் வைத்துள்ளோம். 15 விவசாயிகளுக்கு 16,000 நாற்றுக்கள் வாங்கி கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


விழாவில் ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், ஜனனி பார்ம்ஸ் நிறுவனர் வெள்ளானைப்பட்டி தங்கவேல், பட்டணம் முன்னாள் ஊராட்சித்தலைவர் சாரதாமணி ஜெயராஜ், பீடம்பள்ளி முன்னாள் ஊராட்சித்தலைவர் குமரவேல், தி.மு.க. பிரமுகர் பட்டணம் செல்வக்குமார், காளிமுத்து, சௌரிபாளையம் பகுதி அ.தி.மு.க.கழகச் செயலாளர் வெள்ளிங்கிரி, கே.உலகநாதன் (கோவை மாநகர் 56&வது வட்டம்), பட்டணம் பழனிச்சாமி, விவசாய சங்கத் தலைவர் சுப்பிரமணி, பாபு, தொழிலதிபர் சண்முகம், கைக்கோளபாளையம் பாலு, பட்டணம் ஊராட்சி செயலர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar