இயேசுவின் எழுப்புதல் உபவாச ஜெபக்கூட்டம்

நவம்பர் 9ம் தேதி எஸ்.என்.அரங்கத்தில்
ஜீவவாசல் ஊழியங்கள் நடத்தும்
இயேசுவின் எழுப்புதல் உபவாச ஜெபக்கூட்டம்


கோவை, நவ. 8
கோவை ராமநாதபுரம் செல்லும் சாலையில் எஸ்.என்.அரங்கத்தில் ஜீவவாசல் ஊழியங்கள் நடத்தும் இயேசுவின் எழுப்புதல் உபவாச ஜெபக்கூட்டம் சார்பில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் நவம்பர் 9 ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 10.00 மணி முதல் மதியம் 2.30 மணிவரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி கிறிஸ்துவின் பாறைசபையை சேர்ந்த பாஸ்டர் தொம்மையப்பா,கோவை ஜீவவாசல் ஊழியங்கள் பாஸ்டர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு அருளுறை வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர்.
கூட்டத்தில் கோவை மாவட்டம் ஆசீர்வதிக்கப்படவும், குடும்பங்களில் தெய்வீக ஆசீர்வாதம், சமாதானம், விடுதலைபெறவும், தொழிலில் செழிப்பை பெற்றுக் கொள்ளவும், வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும். கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் தேவபிரசன்னம் நிறைந்த பாடல்கள், தேசத்திற்காக மன்றாட்டு ஜெபம், மகிமையான துதி ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு 2வது சனிக்கிழமையும் உபவாச ஜெபம் நடைபெறும். இதற்கு அனுமதி இலவசமாக அளிக்கப்படும். தொடர்புக்கு ஜீவவாசல் ஊழியங்கள் 98941 49604, 90420 42240 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

Skip to toolbar