பெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும்

எதையும் தடையாக கருதாமல், பெண்கள் கல்வி கற்க வேண்டும்

சூலூர்: கோவை கே.பி.ஆர்., குழும நூற்பாலைகள், கார்மென்ட் நிறுவனங்களில், பணிபுரியும் பெண்களில், உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுவரை, 24.5 ஆயிரம் பேர் உயர் கல்வி படித்துள்ளனர். இக்கல்வியாண்டில், 329 பேர், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்துள்ளனர். 15 மாணவிகள் பல்கலை அளவில் தங்கம், வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர்.மாணவி பிரியா, தமிழக கவர்னரிடம் சிறப்பு விருது பெற்றார். நேற்று தெக்கலூரில் நடந்த, 8வது பட்டமளிப்பு விழாவில், செயல் இயக்குனர் சக்திவேல் வரவேற்றார். குழும தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி, பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘’எதையும் தடையாக கருதாமல், பெண்கள் கல்வி கற்க வேண்டும். பெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும்,’’ என்றார்.பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கோவை நன்னெறிக்கழக தலைவர் இயகோகா சுப்பிரமணியம் மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் சுஜித்குமார், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பாலுசாமி, துணைத்தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar