2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு

 

 

 

2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு சென்னையில் நடைபெற்றது

 

சென்னை, அக்டோபர், 2019: மருத்துவ சட்டங்கள் தொடர்பான கல்வி, தகவல் மற்றும் சேவைகளை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கும் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசின் அண்ட் லா நிறுவனம் சார்பாக அக்டோபர் 20ம் தேதி அன்று சென்னையில் 2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு நடைபெற்றது. நீதிபதி (முனைவர்) B.C. குப்தா அவர்கள் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.


மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மருத்துவர் T.N. ரவிசங்கர் கூறுகையில்,
மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களை பாதிக்கும் வகையில் உள்ள மிகமுக்கிய சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதைத் தவிர்ப்பதற்காக மருத்துவ தீர்ப்பாயத்தை அமைப்பது, தற்போது கடுமையாக உள்ள முன் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு சார்ந்த ஆய்வுகள் (PCPDNT) குறித்த சட்டங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கான உணர்திறன் சோதனைகளை ரத்து செய்தல் போன்ற மிகமுக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.. இத்தகைய சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். மருத்துவ துறையினர் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நீதித்துறையினர் ஆகியோர் இணைந்து செயல்படுவதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது.
மேலும் மருத்துவர் T.N. ரவிசங்கர் கூறுகையில்,
மருத்துவ தீர்ப்பாயம்:
சமீபத்தில் புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மருத்துவ சேவை வழங்குபவர்கள் இந்த புதிய சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில், மருத்துவ கவுன்சில், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரே நோயாளியினால் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஒரே வகையான வழக்குகளின் பெருக்கத்தினால் மருத்துவர்களின் சேவை பாதிக்கப்படுவது மட்டுமின்றி இந்த கால தாமதத்தால் நோயாளிகளுக்கும் எந்த பயனும் இல்லை. மருத்துவம் ஒரு சவால் மிகுந்த துறை மட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு வழக்கு சார்ந்த நுணுக்கங்களை அறிந்துகொள்ள துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுகிறது. எனவே மருத்துவ தீர்ப்பாயங்கள் ஒரு மாற்றாக செயல்பட முடியுமா என ஆராய்வதே தற்போதைய காலத்தின் தேவையாகும். இத்தகைய மருத்துவ தீர்ப்பாயம் மூலம் மருத்துவ அலட்சியம் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும், மருத்துவம் மற்றும் சட்ட விவகாரங்களின் நிபுணர்கள் கொண்ட மன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் நிலை உருவாகும்.
சோனோகிராபியுடன் ஆதார் இணைத்தல் – பெண் சிசு கொலைகளுக்கு ஒரு வழக்கத்திற்க்கு மாறான தீர்வு:
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் PCPNDT சட்டத்தை விரும்பவில்லை. இந்த சட்டம் நீண்ட நடைமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்கும், விரிவான பதிவுகளைப் பராமரிக்காததற்கும் குற்றவியல் வழக்குகளை விதிக்கிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்