நேரு கல்வி நிறுவனத்தில் காவலர் வீரவணக்க நாள்

நேரு கல்வி நிறுவனத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
கோவை, அக். 17
கோவை மாநகர காவல் துறை மற்றும் நேரு கல்வி குழுமங்கள் சார்பில் காவல் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் துறை மற்றும் நேரு கல்வி குழுமங்கள் சார்பில் பொதுமக்களின் உயிர் காக்க தன் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 


விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையாளர் (தெற்கு) ஜெ.செட்ரிக் மானுவேல் கலந்து கொண்டார். நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் அ.முரளிதரன் வரவேற்றார்.
நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது: – 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
உயிர்நீத்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு எங்கள் கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.
கோவை மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையாளர் செட்ரிக் மானுவேல் பேசியதாவது: மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 5 வருடமாவது மத்திய மாநில அரசின் பாதுகாப்பு துறை பணியில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையானது சுமார் 7.21 கோடி ஆனால் காவல் துறையினரோ 1.2 லட்சம் மட்டுமே. இவர்களை வைத்துதான் 7.21 கோடி மக்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்றால் 7.21 கோடி பேரில் 1 சதவீதம் பேர் தான் கிரிமினல்கள். இந்த கிரிமினல்களை கண்காணித்தாலே போதுமானது. கிரிமினல்களை தவிர்த்து மீதமுள்ள நல்ல குடிமக்களால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றது. பொது மக்கள் அரசுக்கும் காவல் துறைக்கும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் அனைவரும் இதே போல் காவல் துறையில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி வேலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில், கல்லூரி டீன் பாலாஜி நன்றி கூறினார். விழாவில் நேரு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசியரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar