தொலைபேசி வாயிலாக பெண்களுக்காக உளவியல் ரீதியில் வழி

கோவை வடவள்ளியில் ஆலயம் அறக்கட்டளை சார்பில் ‘கவுன்சிலிங் சென்டர்’துவக்கம்
கோவை,அக்,
கோவை : தமிழகத்திலேயே முதல் முறையாக முற்றிலும் சேவை அடிப்படையில் தொலைபேசி வாயிலாக பெண்களுக்காக உளவியல் ரீதியில் வழிகாட்டும் வகையில், ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் ஆலயம் கவுன்சிலிங் சென்டர் கோவை வடவள்ளியில் தொடங்கப்பட்டது.
இம்மையத்தை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் தலைவரும், கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான ஆர்.சந்திரசேகர், டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்விற்கு ஆலயம் பயிற்சி மைய திட்ட இயக்குனர் லட்சுமி காந்தன், உளவியல் நிபுணர் எம்.எஸ்.கே.முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியதாவது:- இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வாழ்க்கை முறையில் மக்கள் நித்தம், நித்தம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்பது தான் மாபெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்றைய பொருளாதார, அரசியல், வாழ்வியல் சூழ்நிலையில் பெண்களின் வளர்ச்சி தான் தேசத்தின் வளர்ச்சியாக போற்றப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணத்தையும், பதவியையும் சம்பாதிக்க வேண்டிய நிலையில் பெண்கள் மன அழுத்தத்தில் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதன் விளைவுகள் சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் எதிரொலிக்கிறது. ஆரோக்கியமான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான சமுதாயமாக மாற பெண்களுக்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது. அந்த வழிகாட்டுதல் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்களை கொண்டு குறிப்பாக புகழ்பெற்ற எம்.எஸ்.கே.முகைதீன் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் நிபுணர்களின் குழுவினை கொண்டு தற்கொலை எண்ணம், திருமணம் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் சீண்டல்களால் ஏற்படும் பிரச்சினைகள், தனிமை உணர்வால் ஏற்படும் பிரச்சனைகள், மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றிற்கு முற்றிலும் இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 75300 45670, 75300 45671 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் பெண்களின் வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வழிநடத்துதல், சிறுதொழில் துவங்க வழிகாட்டுதல், கல்வி உதவித்தொகை வழங்குதல், மருத்துவ உதவிகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளை எழுத வழிகாட்டுதல், இயற்கையை பாதுகாக்க இயற்கை தாயகம் அமைப்பை துவங்கி நீர்வழிப் பாதைகள் புதுப்பித்தல், பூங்காக்கள் அமைத்தல், ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், மரங்கள் நடுதல், சமூக காடுகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளையும் செய்து வருகிறது. மேலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த குறைந்த விலையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்ய குனியமுத்தூரில் ஆலயம் பார்மசியும் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் முத்தாய்ப்பாக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக ஆலயம் கவுன்சிலிங் சென்டர் துவங்கப்பட்டுள்ளது, இவ்வாறு ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறினார்,

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar