பொம்மலாட்டம் கோவை நவராத்திரி திருவிழா

ஈஷாவில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றிய பொம்மலாட்டம்
கோவை

 

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் விதமாக பொம்மலாட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஈஷாவில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா செப்.29-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விதமாக பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக பொம்மலாட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
காரைக்காலைச் சேர்ந்த திரு.கே.கேசவசாமியின் ‘காரை ராமன் கிரியேசன்ஸ்’ குழுவினர் இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தனர். இதனை பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். 76 வயதான திரு.கேசவசாமி கடந்த 30 ஆண்டுகளாக பொம்மலாட்ட கலையை நிகழ்த்தி வருகிறார். இதுவரை சுமார் 490 கதைகளை உருவாக்கி அதை பொம்மலாட்டமாக அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முந்தைய நாட்களில் சலங்கையாட்டம், காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை குறித்த கதாகாலட்சேபம், ஒடிசி நடனம் கர்நாடக சங்கீதம் பரதநாட்டியம் போன்ற பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரவு 8 மணியளவில் ஆதியோகியில் 3 டி ஒளி, ஒலி காட்சியுடன் கூடிய ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதே சமயம், லிங்க பைரவி தேவியின் உற்சவமூர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நந்தி முன்பு மகா ஆரத்தி நடைபெற்றது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி கான தினங்கள் என்பதால் லிங்க பைரவி தேவி சந்தன அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து லிங்கபைரவி தேவி மற்றும் தியானலிங்கத்தை தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர்.
நவராத்திரி விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Skip to toolbar