கண்கவர் சாகச நிகழ்ச்சி

சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ
விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி
கோவை, அக்.6


இந்திய விமானப்படை தனது 87 சிறப்பான ஆண்டுகளை நிறைவு செய்வதை அடுத்தி கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ விமானங்களின் கண்கவர் கண்காட்சியையும் சாகச நிகழ்ச்சியையும் நடத்தியது.
இந்திய விமானப்படை மற்றும் அதன் ஆயுதக் களஞ்சியத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள விமானப்படை தளத்தில் விமானங்கள், பாராசூட்டுகள், துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த விமானப்படை சிறப்பு நிகழ்வுகளை நடத்துகிறது.
சில நாட்களுக்கு முன்பு, போபாலில் சாகச விமான நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, கோவை சுலூரில் உள்ள விமானப்படை தளத்தில் விமான நிகழ்வுகள் மற்றும் விமானங்களின் கண்காட்சி நடைபெற்றது. இராணுவ விமானங்கள் காற்றில் சில தாக்குதல்களைக் காட்சிப்படுத்தியதுடன், சில அபாயகரமான செயல்களை செய்தன. தேஜஸ், ஏ.என் 32, எம்.ஜி 17, சாரங் மார்க் 2, விமான துப்பாக்கிகள், ஏவுகணைகள் மற்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Skip to toolbar