2020’ காலண்டர் கோவையில் சுவர்கா பவுண்டேஷன் அறிமுகம்

நான் சிறப்புமிக்கவன் 2020’ காலண்டர்
கோவையில் சுவர்கா பவுண்டேஷன் அறிமுகம்
கோவை,அக்.6
சுவர்கா பவுண்டேஷன் தனது 5வது பதிப்பான `நான் சிறப்புமிக்கவன் 2020’ காலண்டரை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும் கௌமார மடத்தின் தலைவர் கௌமாரகுருபர சுவாமிகள் ஆகியோர் நல்லாசியுடன் கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் அறிமுகம் செய்தது. இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற சங்கரா ஐ பவுண்டேஷன் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் ஆர்.வி. ரமணி தலைமை விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே. பெரியய்யா, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் ஷரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயலாமை உரிமை ஆர்வலர்கள், தொழில்முனைவோர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், அழகு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என 12 ஜோடிகள் இந்த காலண்டரில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Skip to toolbar