குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட விருதினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Skip to toolbar