கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்
கோவை, செப். 27
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தனி அலுவலரும் மாநகராட்சி கமிஷ்னருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை கமிஷ்னர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 90 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷ்னர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மண்டல உதவி கமிஷ்னர்கள் ரவி, செந்தில்குமார் ரத்தினம், மகேஷ்கனகராஜ், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், உதவி ஆணையர் (பணியமைப்பு) மோகனசுந்தரி, மேற்கு மண்டல உதவி நிர்வாக அலுவலர் உஷா, செயற்பொறியாளர்கள் பார்வதி மற்றும் ரவிச்சந்திரன் (மேற்கு மண்டலம்), நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் பழனி, கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு) மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

AD

Skip to toolbar