சாலை வசதி சரி இல்லாததால் போக்குவரத்து மிகவும் மோசமான நிலை

கடலூர் மாவட்டம்
சிதம்பரம் வட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கூர் கிராமத்தில் பல வருடங்களாக சாலை வசதி சரி இல்லாததால் போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளது மழை காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் செல்வதற்கும் பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்கள் அவசர காலங்களில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது மேலும் வடிகால் வசதி இல்லாததாலும் வடிகால் செல்வதற்கு வழி இல்லாததாலும் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த சாலையை சரி செய்து வழங்க வேண்டியும் மற்றும் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை எனவும் அதனையும் சரிசெய்து வழங்கவேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர்

செய்திக்காக
காட்டுமன்னார்கோயில்
செய்தியாளர்
மோகன்

Skip to toolbar