உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்கும் டெய்ம்ளர் டிரக்ஸ்

பிஎஸ் VI டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு
உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை
உருவாக்கும் டெய்ம்ளர் டிரக்ஸ்

10th செப்டம்பர்

பிஎஸ் vI-க்கு நிகரான “யூரோ VI” மீதான 8 ஆண்டுகால அனுபவத்தை
டெய்ம்ளர் டிரக்ஸ் இன்னும் மேம்படுத்தி பயன்படுத்திக்கொள்கிறது
பரிசோதிப்பு மற்றும் உருவாக்க வசதிகளுக்காகவும் மற்றும் 1000-க்கும்
அதிகமான புதிய பாகங்களை உருவாக்குவதற்கும் கூடுதலாக 500
கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
“1.4 மில்லியன் யூரோ VI தரநிலை கொண்ட டிரக்குகள் மற்றும்
பேருந்துகளை சாலைகளில் கொண்டிருக்கும் டெய்ம்ளரின் அனுபவத்தின்
காரணமாக, எமது பாரத்பென்ஸ் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை 2020,
ஏப்ரல் மாத காலகெடுவிற்குள் பிஎஸ் V தரநிலைக்கு மாற்றுவதற்கு
நாங்கள் எளிதாக தயார்நிலையில் இருக்கிறோம் என்பதே அர்த்தமாகும்.
இந்த ஆதாயத்தின் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும்)
டிரக்குகளை 2021/ 2022 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி செய்வதை
நாங்கள் தொடங்கி விடுவோம்,” என்று கூறுகிறார் டெய்ம்ளர் இந்தியா
கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் – ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை
செயல் இயக்குனரான திரு. சத்யாகம் ஆர்யா.

சென்னை – 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்பாட்டிற்கு
வரவிருக்கின்ற பாரத் ஸ்டேஜ் VI – ன் புதிய புகை உமிழ்வு
தரக்கட்டுப்பாடுகளுக்கு மாறுவதில் தனது ஆயத்த நிலையை
டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) இன்று
காட்சிப்படுத்தியது. உலகளவில் டெம்ளர் நிறுவனம், யூரோ VI
தொழில்நுட்பத்துடன் 1.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை
ஏற்கனவே விற்பனை செய்திருக்கிறது. பிஎஸ் VI தரநிலைகளுக்கு
நிகரானதாக யூரோ VI புகை உமிழ்வு தரநிலைகள் இருக்கின்றன. கூடுதலாக,
2019 ஜூலை மாதத்திலேயே பிஎஸ் VI -க்கான சான்றாக்கத்தை DICV
பெற்றிருக்கிறது. இந்திய சந்தைக்காக யூரோ VI – ன் மீதான தங்களது
நிபுணத்துவத்தை அவர்கள் வெற்றிகரமாக மாற்றி செயல்படுத்தியிருக்கிறார்கள்
என்பதையே இச்சான்றாக்கம் நிரூபிக்கிறது.

DICV – ன் பிஎஸ் VI திறன் மீதான முன்னோட்ட காட்சி நிகழ்வில் பேசிய Page 2
டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் – ன் நிர்வாக இயக்குனர்
மற்றும் தலைமை செயல் இயக்குனரான திரு. சத்யாகம் ஆர்யா, “1.4
மில்லியன் யூரோ VI தரநிலை கொண்ட டிரக்குகள் மற்றும் பேருந்துகளை
சாலைகளில் கொண்டிருக்கும் டெய்ம்ளரின் அனுபவத்தின் காரணமாக, எமது
பாரத்பென்ஸ் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை 2020, ஏப்ரல் மாத
காலகெடுவிற்குள் பிஎஸ் V தரநிலைக்கு மாற்றுவதற்கு நாங்கள் எளிதாக
தயார்நிலையில் இருக்கிறோம் என்பதே அர்த்தமாகும். இந்த ஆதாயத்தின்
காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் டிரக்குகளை 2021/ 2022 ஆம்
ஆண்டுக்குள் ஏற்றுமதி செய்வதை நாங்கள் தொடங்கி விடுவோம்,” என்று
கூறினார்.

இந்தியாவிற்காக தங்களது யூரோ V தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பதற்காக
ஏறக்குறைய 500 கோடி ரூபாயை DICV முதலீடு செய்திருக்கிறது.
பரிசோதிப்பிற்காக 2 மில்லியன் கி.மீ. சோதனை ஓட்டத்தை நிறைவு
செய்திருக்கும் இது, புதிய தயாரிப்பு வசதிகளை நிறுவவும் மற்றும் 1000-க்கும்
அதிகமான வாகன பாகங்களை தயாரிக்கவும் இந்த முதலீட்டைப்
பயன்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தனது தயாரிப்பு வாகனங்களில் 80
சதவிகிதத்திற்கும் கூடுதலான பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கின்ற
சாதனையை DICV செய்திருக்கிறது.

பிஎஸ் VI- க்கு மாறுகின்ற இச்செயல்பாடு, மெக்சிகோ, சிலி மற்றும்
பிரேசில் போன்ற நாடுகளுக்கு முழுமையாக உருவாக்கப்பட்ட வாகனங்கள்,
இன்ஜின்கள் மற்றும் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிக
வாய்ப்புகளை சாத்தியமாக்கியிருக்கிறது. இந்த நாடுகளும், இதேபோன்ற
புகை உமிழ்வு தரநிலைகளுக்கு விரைவில் இடம்பெயரவிருக்கின்றன என்பது
குறிப்பிடத்தக்கது. டெய்ம்ளர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு
உலகளாவிய தயாரிப்பு குவிமையமாக திகழும் இந்தியாவின் நிலையை
இது இன்னும் வலுவாக்குகிறது,” என்று திரு. ஆர்யா விளக்கமளித்தார்.

பிஎஸ் V வாகனங்களுக்கான எரிபொருள் கிடைக்கப்பெறும் நிலையைச்
சார்ந்து, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தரம் உயர்த்தப்பட்ட
தனது பிஎஸ் VI டிரக்குகள் மற்றும் பேருந்துகளை DICV அதிகாரப்பூர்வமாக
அறிமுகம் செய்யும். 2021/22 ஆம் ஆண்டுக்குள் தனது OM926 இன்ஜின்
சீரிஸ்களை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்வதை DICV தொடங்கும்.

வாகனங்களை உற்பத்தி செய்கின்ற DICV- ன் ஒரகடம் உற்பத்தி
ஆலையானது, பாரத்பென்ஸ் ஃபியூசோ, மெர்சிடெஸ் – பென்ஸ் மற்றும்
ஃபிரெய்ட்லைனர் என்ற நான்கு பிராண்டுகளுக்கும் தேவையான இன்ஜின்கள்,
டிரான்ஸ்மிஷன்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை தயாரிப்பதில்
உலகளவில் டெய்ம்ளரின் ஒரே அமைவிடம் என்ற பெருமையைக்
கொண்டிருக்கிறது.

பல்வேறு புவியியல் பரப்புகளில் பாரத்பென்ஸ் கனரக மற்றும் நடுத்தர ரக
டிரக்குகளுக்கு பிஎஸ் VI- க்கான சோதனை ஓட்டங்களை 2 மில்லியன்
கி.மீட்டருக்கும் அதிகமாக நிறைவு செய்திருப்பதற்கும் கூடுதலாக, பிற
சந்தைகளிலிருந்து பெற்றிருக்கும் கற்றல்களின் அடிப்படையில் தனது
விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை DICV கூடுதல்
திறனுள்ளதாக ஆக்கி வருகிறது. நாடெங்கிலும் 200-க்கும் அதிகமான
வாடிக்கையாளர் தொடுமுனைகளைக் கொண்டு இந்தியாவெங்கும் செயல்பட்டு
வருகின்ற அதன் மலர்ஷிப்களில் பயிற்சிக்கான அலகுகளில் இந்த
திறன்நிலைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar