கனடா வானொலி தமிழகத்தில் கால் பதிப்பு

கனடா வானொலி தமிழகத்தில் கால் பதிப்பு

கனடா நாட்டில் மிகவும் பிரபலமான டிவி ஐ தொலைக்காட்சியின் சார்பு நிறுவனமான சிஎம் ஆர் எப் எம் வானொலி நிலையத்தின் புதிய கிளை சென்னையில் தொடங்கப்பட்டது.

இதன் நிறுவனரும், நிர்வாக அலுவலருமான ஸ்டான் ஆண்டனி மற்றும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும், நடிகருமான இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து நிர்வாக இயக்குனரும், தலைவருமான ஸ்டான் ஆண்டனி கூறும்போது, உலகெங்கும் தமிழை கொண்டு சேர்க்கும் பொருட்டு உயரிய நோக்கத்தில் நாங்கள் கனடா நாட்டில் தொடங்கிய தொலைக்காட்சியும், அதன் தொடர்ச்சியாக எஃப் எம் வானொலியும் இதுவரை தமிழ் பேசும் கண்டங்களில் மிகவும் நேர்த்தியான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி களில் விவாத நிகழ்ச்சி, கலந்துரையாடல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தாயக உலகச் செய்திகள், மற்றும் தமிழின் தனித்துவமான நிகழ்ச்சிகள் இலவசமாக நவீன தொழில்நுட்பத்துடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாங்கள் ஊடகப் பணிகளைத் தாண்டி இன, மொழி, கலாச்சார ரீதியாக பல்வேறு செயல்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

வட அமெரிக்கக் கண்டத்தின் முதன்மையானதும் பரந்து விரிந்துள்ளது. தமிழ் ஊடக வடிவமாக நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

Skip to toolbar