குடிதண்ணீரில் சாக்கடை நீருடன் புழுக்கள் கலந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை 74 வது வார்டு ரூபா நகர் பகுதியின் அவல நிலை
கோவை. ஆகஸ்ட்17-
அவை ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதி அருகில் உள்ள ரூபா நகர் பகுதியில் குடிதண்ணீரில் சாக்கடை நீருடன் புழுக்கள் கலந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை ரூபா நகர் பகுதியில் 2000 வீடுகள் உள்ளன. சுமார் 20 நாட்களாக நல்ல தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது எங்கள் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் வீதி ரூபா நகர் வின்சென்ட் ரோடு ஸ்ரீநகர் ஆகிய வார்டுகள் உள்ளன சுமார் ஒரு மாதம் காலமாகவே இந்த பிரச்சனை உள்ளது. இது குறித்து எங்கள் பகுதி மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. தகவல் சொல்லியும் அவர்கள் சரி செய்வதாக கூறிவிட்டு சென்றவர்கள்தான், இதுநாள் வரையிலும் சரி செய்ய வரவில்லை. சமீபத்தில் மழை பெய்ததால் தோண்டி போட்ட குழிகள் அனைத்தும் மூடப்படாமல் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமானது மட்டுமல்லாமல் காய்ச்சலுக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆளாகின்றனர். இதில் டிரைனேஜ் வேலை செய்வதால் அனைத்து பகுதிகளிலும் குழிதோண்டி பைப்புகள் உடைந்து உள்ளன. ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது.
சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்கள் கீழே விழுந்து விடுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதை அதிகாரிகள் கருத்தில்கொண்டு சரிசெய்து தரவேண்டும். இல்லையென்றால் நாங்கள் மாநகராட்சி கமிஷனர் , கலெக்டர் ஆகியோரிடம் நேரடியாக மனு அளிப்பதுடன் ஆர்ப்பாட்டம் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN 9381811222

Skip to toolbar