முதியவருக்கு உதவிய சிறப்பு உதவி ஆய்வாளர்

மூச்சுதிணறல் ஏற்பட்ட முதியவருக்கு உதவிய சிறப்பு உதவி ஆய்வாளர்

13-08-2019-ம் தேதியன்று திருநெல்வேலி இரயில் நிலையத்தில் 70 வயது மதிக்கதக்க வடமாநிலத்தை சேர்ந்த முதியவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனை கண்ட அங்கு பணியில் இருந்த சந்திப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.நடராஜன் அவர்கள் விரைந்து செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முதலுதவி அளித்து அவரது உயிரை காப்பாற்றினார். பின்னர் முதியவரை விசாரித்ததில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் தாஸ் என்பது தெரியவந்தது. தூரிதமாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் இச்செயலை அங்கு இருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இத்தகவலறிந்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாஸ்கரன் இ.கா.ப, அவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் பாராட்டு தெரிவித்தார்கள். தனது உயிரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரையும் 108 ஊழியரையும் முதியவர் வாழ்த்தினார்.

Skip to toolbar