இந்தியாவை பலப்படுத்த வானதி சீனிவாசன் தலைமையில் தேசிய கொடி குறித்த விழிப்புணர்வு

இந்தியாவை பலப்படுத்த வேண்டும்
கோவை. ஆகஸ்ட்.13
சுதந்திர தினம் வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஒவ்வொரு கடைகளிலும் ஏறி தேசியக் கொடியை வழங்கி ஒருங்கிணைந்த இந்தியாவை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்……

கா

ஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35a ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து ஒரு புறம் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த இந்தியாவை வலுப்படுத்த வேண்டும் என பாஜகவினர் ஆங்காங்கே கோரிக்கைகள் விடுத்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் 50க்கும் மேற்பட்ட பாஜகவினருடன் காந்திபுரம் பகுதியிலுள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கிராஸ்கட் சாலை முழுவதும் தேசிய கொடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் அங்குள்ள ஒவ்வொரு கடைகளிலும் தேசிய கொடியை வழங்கிய அவர்,சுதந்திர தினத்தன்று அவரவர் தங்கள் வீடுகளிலும் கடை வாயிலிலும் தேசிய கொடி ஏற்றி ஒருங்கிணைந்த இந்தியாவை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்……

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN 9381811222

Skip to toolbar