அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
கோவை, ஆகஸ்ட்.10

கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கோ இண்டியாவில் நடைபெற்றது.
கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக அரிமா லாலா ஜி. முத்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். அரிமா எஸ்.செந்தில்குமார், அரிமா கே.நந்தகுமார் ஆகியோர் புதிய செயலாளர்களாகவும், அரிமா சி.தேவராஜ் பொருளா ளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆளுநர் பி எம் ஜே எஃப் அரிமா ஆர்.கருண பூபதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசிய அவர், “2&வது முறையாக இந்த சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும் அரிமா ஜி. முத்துராஜ் மிக சிறந்த தலைவர். இவர் நிறைய நற்பணிகளை செய்து வருகிறார். இவரது பணி தொடர வாழ்த்துகிறேன். புதிய செயலாள ர்களாக பொறுப்பேற்றுள்ள அரிமா ச.செந்தில்குமார், அரிமா கே.நந்தகுமார் மற்றும் புதிய பொறுப்பாளர் அரிமா சி தேவராஜ் ஆகியோரையும் நான் வாழ்த்துகிறேன். “
அவர் மேலும் பேசுகையில், “ நாம் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் வாயினால் பாடவேண்டும். நம்மில் தமிழ் உணர்வும் தேசிய உணர்வும் மேம்பட இது உதவும்.
“25 வருடங்களுக்கு முன்னர் முத்து ரத்தின சபாபதி அவர்கள் கண்ட கனவே இந்த ரத்த வங்கி. இந்த கனவு விரைவில் நிறைவேற வுள்ளது. இதற்கான முழு அச்சானியே இந்த சங்கம் தான். இந்த சங்கத்தின் மண்டல தலைவர் காளியப்பன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் இந்த ரத்த வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து துவங்கி வைத்தனர். இப்போது ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த ரத்த வங்கிக்கான இதற்கான ஒப்புதலும் விரைவில் கிடைத்துவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”
“மக்கள் இப்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை பிளாஸ்டிக். இதனை நாம் மறுசுழற்சி செய்யவேண்டும். அதே போல தண்ணீரையும் சேமித்து வைக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நல்ல தண்ணீரையும், நல்ல பூமியையும் கொடுக்க வேண்டும். “ என்று பேசினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக எம் ஜே எஃப் அரிமா சிங்கை என்.முத்து, மண்டல தலைவர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்கள் நியமனத்தை அரிமா இராம சுப்பிரமணியம் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லக்ஷ்மி விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் லாலா. ஜி.துரை மற்றும் மூத்த வழக்கறிஞர் யு. சங்கர நாராய ணன், டாக்டர்.ஏ.பி. ஜெயச் சந்திரன், ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் அரிமா ஷி.ராம்குமார், ஜி எஸ் டி ஒருங்கிணைப்பாளர் எம் ஜே எஃப் அரிமா மின்னல் பி.சீனிவாசன், இரண்டாம் நிலை மாவட்ட ஆளுநர் அரிமா ஏ.நடராஜன், நேரு நகர் அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் எம்.ஜே.எஃப் அரிமா ஆர்.காளியப்பன், மண்டல துணைத் தலைவர் அரிமா ஜி.ரகுபதி, ஜி.எஸ்.டி உறுப்பினர் அரிமா ஜே.ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Skip to toolbar