வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவையில் 24 மணிநேரமும் செயல்படும்

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள
கோவையில் 24 மணிநேரமும் செயல்படும் தகவல் மையம்
கோவை
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தென்மேற்கு பருவமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப் பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அமைச்சர் பேசியதாவது : குடிமராமத்து எனும் உண்ணத திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து குளம் மற்றும் குட்டைகளும் தூர்வாரப்ப ட்டதன் விளைவாக, நீர்நிரம்பி முழுகொள்ளவை எட்டியுள்ளது.
நமது மாவட்டத்தின் சிதிலமடைந்த மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் மற்றும் சிறுபாலங்கள் உடனடியாக பழுது பார்க்கவும், மழைநீர் வடிகால்களுக்கு இடையே இணைப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து, அங்கு மழைநீர் இணைப்பு வடிகால்கள் அமைக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக, சமுதாயக் கூடங்கள், உள்ளிட்ட பிற பொதுக் கட்டடங்கள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திடல் வேண்டும்.
வருவாய் துறை மூலமாகவும், வளர்ச்சித்துறை மூலமாகவும், ஒவ்வொரு வட்டம்,வட்டாரம் வாரியாக துணை ஆட்சியர்,உதவி இயக்குநர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மழை, வெள்ள பாதிப்புகள் கண்காணிப் பதுடன், உரிய தடுப்பு மற்றும் நிவா ரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24மணிநேரமும் நேரங்களில் தொடர்ந்து செயல்படும் வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டு வெள்ள நிவாரண நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கிராமங்கிலேயே இருந்து உடனுக்குடன் நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் குளோரின் கலந்த குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றங்கரையோரப்பகுதிகளிலும், பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புப்பணிகள் துறை அலுவலர்களை தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசா மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Skip to toolbar