வெற்றிகரமாக 100 எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் செய்து ஜெம் மருத்துவமனை சாதனை ~முதலமைச்சர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது~

கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி, லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரொபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கு பெயர்போன இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜெம் மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சரின் சுகாதார காப்பீடுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்களுக்கு ‘பயனாளிகள் கூட்டத்தை’ ஒருங்கினைத்தது. நூற்றுக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் இத்திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விழாவில், மதிப்பிற்குரிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. சி.விஜயபாஸ்கர், தமிழக அரசு சுகாதார செயலாளர் மருத்துவர். பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு தருணத்தை சிறப்பித்தனர்.
இதுகுறித்து பேசிய மதிப்பிற்குரிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. சி.விஜயபாஸ்கர், “முதலமைச்சர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சைகள் செயல்படுத்தப்படுவதை அங்கீகரித்த ஒரே மாநிலம், முதல் மாநிலம் தமிழ்நாடு” என்றார்.
ஜெம் மருத்துவமனை எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பிரவீன்ராஜ் பேசுகையில், “எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை என்பது லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யப்படும் சிகிச்சை. உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் சம்பந்தமான உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். தமிழ்நாடு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை அங்கீகரிப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக மாநில அரசு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இது போன்ற சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே போல, மற்ற மாநிலங்களிலும் இத்திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். உடல் பருமன் பிரச்சனைகளால் உயிர் பாதிப்பு ஏற்படும் அபாயகரமான கட்டத்தில், இது போன்ற சிகிச்சைகளின் அறிமுகம் மிகவும் தேவையானது”

மேலும், “உலக சுகாதார அமைப்பு (WHO), உடல் பருமன் பிரச்சனையை நோயாக அறிவித்துள்ளது. உயர் இரத்த அழுத்தம், கருவுறாமை, தூக்கத்தில் மூச்சுத்திணறல், இருதய நோய் போன்ற பாதிப்புகள் உடல்பருமன் பிரச்சனையால் ஏற்படுகின்றன. எனவே, இது சம்பந்தமான சிகிச்சை முறைகள் மிகவும் அவசியாமாகிறது. ஏற்கனவே, நூற்றுக்கும் மேற்பட்ட எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் ஜெம் மருத்துவமனையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தருணத்தில், இது சாத்தியமாக உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
எடைக்குறைப்பு அறுவை சிகிச்சைகளினால் பயன்பெற்ற 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

AD

Skip to toolbar